Friday, April 27, 2012

ஆசியாவை குறிவைக்கும் அமெரிக்க உளவுப் பிரிவு !


வாஷிங்டன்:ஆசியாவில் வளர்ந்துவரும் நாடுகளை குறிப்பாக ஈரானையும், சீனாவையும் குறிவைத்து அமெரிக்க பாதுகாப்புத்துறை புதிய உளவு நெட்வர்க்கை துவங்குகிறது. பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேட்டா இதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது. புதிய உளவுப்பிரிவு சி.ஐ.ஏ மற்றும் இதர அமெரிக்க உளவுத்துறைகளுடன் ஒத்துழைத்து இயங்கும். சர்வதேச அளவில் நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையில் புதிய ஏஜன்சியை உருவாக்கி இருப்பதாக பாதுகாப்பு
துறையில் மூத்த அதிகாரியை மேற்கோள்காட்டி நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.
ஆஃப்கான் மற்றும் ஈராக்கில் இருந்து திரும்பியவர்கள் இந்த ஏஜன்சியில் செயல்படுவர். ராணுவ ரகசிய உளவுப் பிரிவிற்கு உதவுவதற்காக முன் அனுபவம் மிக்க லெஃப்டினண்ட் ஜெனரல் மைக்கேல் டி ஃப்ளினை ஒபாமா அரசு நியமித்துள்ளது.
thanks to asiananban

0 comments:

Post a Comment