Saturday, December 22, 2012

வழக்கு விசாரணைகளின் போது "பர்தா" அணிய "கனடா" உச்சநீதிமன்றம் அனுமதி!

     DEC22, "சுப்ரீம் கோர்ட் ஆஃப் கனடா"வில், வழக்கு ஒன்றில் ஆஜரான முஸ்லிம் பெண், ஹிஜாபுடன் வழக்கில் பங்கெடுத்துக்கொள்ள அனுமதி கோரியதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

    4 நீதிபதிகள் கொண்ட அமர்வில், இரு நீதிபதிகள் நிபந்தனையின்றி ஏற்றுக்கொண்டாலும், இருவர் எதிர்கருத்தை தெரிவித்தனர்.

     அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி "பியூர் லேமக் லச்சின்"ஹிஜாப் அணிய குறிப்பிட்ட இந்த வழக்கில் அனுமதி வழங்கப்பட்டாலும், குறுக்கு விசாரணை, அடையாள பரேடு, முக்கிய சாட்சியங்களின்போது எதிர்தரப்பின் கோரிக்கைகள் போன்ற பல அம்சங்களை கருத்தில் கொண்டு தான், பர்தா அணிய அனுமதி அல்லது தடை போன்ற விஷயங்களை தீர்மானிக்க முடியும் என்று சொன்னார்.

    எனவே, ஒவ்வொரு வழக்கிலும் அதன் தன்மைக்கு ஏற்ப சம்மந்தப்பட்ட நீதிபதிகளின் முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டும், என்றார் தலைமை நீதிபதி லேமக்.

0 comments:

Post a Comment