Wednesday, December 26, 2012

சிறுபான்மையினர் கல்வி உதவியிலும் பாரபட்சம் : அதீப் எம்.பி., குற்றச்சாட்டு!

   DEC26, சிறுபான்மையினர் "கல்வி உதவி" திட்டத்துக்கு குறைந்த அளவு நிதி (பட்ஜெட்) ஒதுக்கப்படுவதால், அனைத்து மாணவர்களுக்கும் உதவி கிடைக்காத நிலை உள்ளது. அதேநேரம், தலித்துகள் உள்ளிட்ட பிரிவினருக்கு, பட்ஜெட் கட்டுப்பாடு இல்லாமல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் "ஸ்காலர்ஷிப்" கிடைப்பதாக முஹம்மத் அதீப் தெரிவித்தார்.
நேற்று சஹாரன்பூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது, மத்திய திட்டக்கமிஷனின் பாரபட்ச போக்கை புள்ளி விவரங்களுடன் அதீப் வெளியிட்டார்.

     அரசின் கணக்குப்படி 13.4% இருக்கும் முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய விகிதாச்சாரப்படி நலத்திட்டங்கள் கிடைப்பதில்லை, என்றார்.
 
     2020ம் ஆண்டு வரையிலான "12ம் ஐந்தாண்டு திட்டத்தில்" முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூக மக்களின் மேம்பாட்டுக்காக பரிந்திரைக்கப்பட்ட தொகையில், மூன்றில் இரண்டு பங்கு குறைத்து நிதி ஒதுக்க உத்தரவிட்டுள்ளார் திட்டக்கமிஷன் துணைத்தலைவர், மாண்டேக் சிங் அலுவாலியா.

     இந்த அளவு குறைத்து நிதி ஒதுக்கியுள்ளதால், எந்தவொரு திட்டத்திலும் விண்ணப்பிக்கும் (வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள) முஸ்லிம்களில் "மூன்றில் ஒருவர்" தான் பயன்பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

     அதேநேரம், தலித் உள்ளிட்ட பிற சமூக மாணவ மாணவியருக்கு "பட்ஜெட் கட்டுப்பாடு இல்லாமல்" விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உதவி என்ற வகையில், திட்டம் செயல்படுத்தப்படுவதாக வேதனையுடன் தெரிவித்தார், மாநிலங்களவை உறுப்பினர் முஹம்மத் அதீப்.

0 comments:

Post a Comment