Saturday, September 1, 2012

தனி மனிதருக்கு சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் 144 தடை உத்தரவு ?


இணைய தள அதிரைவாசிகளுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

அதிரை எக்ஸ்பிரஸ் வலைதளத்தில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் மரியாதைக்குறிய ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிசா மகளிர் அரங்கில் பெண்கள் பயான் நடைப்பெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது என்று எந்த ஒரு காரணமும் இன்றி வெளியான அதிர்ச்சி செய்தி பதியப்பட்டு வெளிநாடு வாழ் அதிரைவாசிகளை மட்டுமல்ல உள்ளூர் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு காரணம் என்ன? இதன் பின்னணியில் யார் இருந்திருக்கிறார்கள்? என்ற கேள்விகள் உங்கள் மத்தியில் எழுந்திருக்கலாம். அவைகளை நிவர்த்தி செய்யவே இந்த பதிவு. இது எந்த தனிநபரையும், எந்த ஒரு அமைப்பில் உள்ளவர்களையும் துன்புறுத்த அல்ல, மாறாக உண்மை நிலை மக்களுக்கு புரிய வேண்டும் என்பதறாக மட்டுமே. எல்லாவற்றையும் அல்லாஹ் கண்கானித்துக்கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தில் எழுத்தபட்டது.

யார் இந்த ஹைதர் அலி ஆலிம்?

கடந்த பல வருடங்களாக ஊரில் நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக அதிரையின் மறைந்த ஆலிம் பெருமக்கள் பலர் பகிரங்கமாக குரல் கொடுத்து வந்தார்கள் இதில் மிகவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் மரியாதைக்குரிய மர்ஹூம் முஹம்மது அலி ஆலிம் (ரஹ்) அவர்கள் ஊரில் நடைபெறும் மிகப்பெறும் பித்அத்களுக்கு எதிராக பகிரங்கமாக குரல் கொடுத்தவர்கள். மர்ஹூம் முஹம்மது அலி (ரஹ்) அவர்கள் இருக்கும் காலத்திலும் அவர்களின் மறைவுக்கு பிறகு மார்க்க என்ற பெயரில் புதிதாக தினிக்கப்பட்டுள்ள பித்அத்துக்களை பகிரங்கமாக மார்க்க மேடைகளில் எதிர்த்து குரல் கொடுத்துவரும் மார்க்க அறிஞர்களில் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களும் ஒருவர். தமிழ்நாட்டில் சித்தார்கோட்டையிலிருந்து நம் அதிரை மண்ணிற்கு குடிபெயர்ந்து மார்க்க பிரச்சாரம் (பெரிய ஜும்மா பள்ளி பயான், பெண்கள் பயான், தக்வா பள்ளி பயான்) செய்துவருகிறார்கள்.

என்ன பிரச்சினை?

கடந்த சில மாதங்களாக சித்தீக் பள்ளி சொத்து விவகாரத்தில்  ஏற்பட்டுள்ள முறைகேடுகளை சித்திக்பள்ளி நிர்வாகம் உண்மையை வெளியில்  கொண்டு வந்தது என்பது ஊரில் உள்ள அனைவரும் அறிவார்கள்.  இதனால் ஒரு சிலருக்கு சித்திக்பள்ளி நிர்வாகத்தின் தலைவரான ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மேல் தனிப்பட்ட கோபமும் குரோதமும் ஏற்பட்டது. மேலும் ஊரில் நடைபெற்று வரும் பித்அத்களை எதிர்த்து குரல் கொடுத்து வருவதாலும் பல ஆண்டுகளாக அதிரையில் பித் அத்களை ஆதரித்துவரும் ஒரு சில உலமாக்கள் மற்றும் மவ்லித் லொப்பைமார்களுக்கு ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மேல் ஒரு கோபப்பார்வை தொடர்ந்து இருந்து வந்துள்ளது என்பது ஊரில் உள்ள அனைவரும் மிகவும் அறிந்ததே. இதற்கிடையில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவை கேட்க ஆண்கள் பெண்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்து வருகிறது என்பது ஊரில் உள்ள அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை.

கடந்த ஒரு சில மாதங்களாக அதிரை தக்வா பள்ளியின் ஒரு நிர்வாகி சகோ உமர் தம்பி அவர்கள் முயற்சியால் ஊரில் ஒரு சிலரிடம் மட்டும் கையொப்பம் பெற்று, ஒரு தவறான ஆதாவது பொய்யான தகவலை வைத்து தக்வா பள்ளி நிர்வாகத்திற்கு ஒரு கடிதம் கொடுக்கபட்டது. இந்த தகவல் தவறான தகவல் என்பதால் தக்வா பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் அதே உமர்தம்பி அவர்கள், தக்வா பள்ளி நிர்வாக கூட்டத்தில் எடுக்கப்படாத தீர்மானத்தை எடுத்தது போல் மினிட்ச் புத்தகத்தில் தானாகவே எழுதி (மினிட்ச் புத்தகம் திட்டமிட்டு இதுவரை ஒழிக்கப்பட்டுள்ளது) ஷம்சுல் இஸ்லாம் சங்கம், தமிழ்நாடு வக்பு வாரியம், காவல்துறை, ரிசீவர் ஜெயச்சந்திரன் அட்வகெட். இவர்கள் அனைவருக்கும் ஒரு கடிதம் எழுதுகிறார், இதில் தக்வா பள்ளி ட்ரஸ்ட் தலைவர் கையப்பமின்றியும், அவரின் அனுமதியின்றியும் தானே எழுதுகிறார். இதில் தக்வா பள்ளியில் மார்க்க பிரச்சாரம் செய்யும் ஒட்டுமொத்த தாயிக்களை அனைவரின் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இங்கு குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய விசயம் என்னவென்றால், சகோ உமர்தம்பி சென்ற வருடம் அதிரை உலமாக்கள் சபையிடம் அதிரை தக்வா பள்ளியில் ஓதப்பட்டுவரும் மவ்லிதை நிறுத்த வேண்டும் என்று கோரிகை மனு அளித்துள்ளார்.

மேலும் அதே உமர்தம்பி கடந்த 18.08.2012 அன்று பட்டுக்கோட்டை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு போடுகிறார். இதில் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் தீவிரவாத பிர்ச்சாரம் செய்து, ஊரில் உள்ள இளைஞர்களை வழிகெடுத்து வருதாகவும் மேலும் ஊரில் உள்ள இளைஞர்களை ஒன்று திரட்டி பிரிவினை ஏற்பட தூண்டுவதாகவும் இல்லாத பொல்லாதவைகளை எழுதி ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் போலீஸ் நிலையத்திலும் ஹைதர் அலி ஆலிம் தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார் என்ற புகாரும் கொடுத்து இந்த வருட ரமளானில் மிகப்பெரிய தொந்தரவை கொடுத்து வந்துள்ளார். ஊரில் உள்ள பல சகோதரர்களின் முயற்சியால் உமர்தம்பி காவல்நிலையத்தில் கொடுத்த தவறான புகார் திரும்ப பெறப்பட்டுள்ளது. இருப்பினும் நீதிமன்ற வழக்கு இன்னும் விசாரனையில் உள்ளது.

நிலைமை இப்படி இருக்க, போலீஸ் புகாரை திரும்ப பெற்ற உமர்தம்பி மீண்டும் சம்சுல் இஸ்லாம் சங்கத்தை அனுகி, தான் முன்பு கொடுத்த புகாருக்கு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று முறையிட்டுள்ளார். இதன் அடிப்படையில் சம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் அவர்கள் ஹைதர் அலி ஆலிம் அவர்களை அழைத்து சங்க தலைவர் வீட்டில் பேச முற்பட்டுள்ளார்கள். ஹைதர் அலி ஆலிம் அவர்களை அன்றைய தினம் (29-08-2012) காலை 10:30 மணியளவில் சங்க தலைவர் வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்த சங்கத்தை சேர்ந்த சகோதரர் சாலிஹ் அவர்களிடம் "சகோதரர் உமர்தம்பி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதால் வழக்கமான நிகழ்வுகளை தவிர மற்ற எந்த கூட்டத்திற்கும் செல்ல வேண்டாம் என்று வழக்கறிஞர் அறிவுறுத்தியிருக்கிறார், ஆகையால் வழக்கு முடிந்த பிறகு நானே நேரில் வந்து சந்திக்கிறேன் என்று சொல்லி அனுப்பினார். ஆனால் அசர் தொழுகைக்கு பிறகு ஸாலிஹ் அவர்கள் ஹைதர் அலி ஆலிம் அவர்களிடம் வந்து, நீங்க வர இயலவில்லை என்றால் நாங்கள் வந்து சந்திக்கிறோம் என்று தலைவர் சொல்லியனுப்பினார்கள். அதற்கு ஹைதர் அலி ஆலிம், அவர்கள் "சங்க தலைவர் வந்து என்னை சந்திப்பதற்கு நான் பெரிய ஆள் இல்லை, தக்வா பள்ளி பயான் முடித்துவிட்டு போன் பேசிவிட்டு சந்திக்கலாம்" என்று ஸாலிஹ் அவர்களிடம் சொல்லி அனுப்பிய 10 நிமிடத்திலேயே மீண்டும் சகோதரர்கள் சங்க தலைவர் உமர் , பேரூராட்சி தலைவர் அஸ்லம், சங்க துனை தலைவர் சகபுதீன், பேராசிரியர் அப்துல் காதர் மற்றும் ஒருவர் சென்று ஹைதர் அலி ஆலிம் அவர்களின் வீட்டிற்கு சென்று சந்திக்க முற்பட்டுள்ளார்கள். பள்ளியில் வைத்து சந்திக்கலாம் என்று தெரிவித்துவிட்டு ஹைதர் அலி ஆலிம் அவர்கள் தன் வீட்டிலிருந்து சித்தீக் பள்ளிக்கு வந்தவுடன் சங்க தலைவர் அவர்கள் "வெளியூர்காரர்" என்ற வார்த்தையை பிரயோகித்த காரணத்தால் நடைபெறவிருந்த சந்திப்பு சலசலப்பால் தடைபட்டது. சங்க தலைவர் மற்றும் அவருடன் வந்த சகோதரர்கள் சித்தீக் பள்ளியை விட்டு வெளியேறிவிட்டார்கள். இது தான் நடந்த சம்பவம்.

இதனை தொடர்ந்து ஷம்சுல் இஸ்லாம் சங்கம் நிர்வாகிகள் (தலைவர், துனை தலைவர், துனை செயலாளர்) மூன்று நபர்கள் மட்டும் கூடி ஹைதர் அலி ஆலிம் அவர்கள் பயான் செய்து வரும் ஆயிசா மகளிர் அரங்கத்தில் நடைபெறும் மகளிர் வாரந்திர பயான் தற்காலிகமாக நிறுத்தபடுவதாக அதிரை எக்ஸ்பிரஸ் என்று அறிவிப்பை தெரிவித்து விட்டு. அதிரையில் உள்ள அனைத்து முஹல்லாக்களுக்கு ஹைதர் அலி ஆலிமை மார்க்க சொற்பொழிவு செய்ய தடைவிதிக்க வேண்டும் என்று கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலத்தெரு சங்கத்திற்கு அனுப்பட்ட கடித நகல் மற்றும் ஆயிசா மகளிர் அரங்கத்தின் நிர்வாகி அஸ்லத்திற்கு அனுப்பட்ட கடித நகல் இணைக்கப்பட்டுள்ளது.

ஊரில் இருப்பவர்களுக்கும் வெளியூர்களில் இருக்கும் அதிரைவாசிகளுக்கு எழும் சந்தேகம் இதே..

1.   ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவை தடை செய்யும் அளவுக்கு அவர் என்ன மன்னிக்க முடியாத குற்றம் செய்தார்?

2.   ஒரு பிரச்சினை சங்கத்துக்கு வந்தால் பொது குழு அல்லது செயற்குழு அல்லது நிர்வாக குழு கூடி தீர்மானம் போட்டு அல்லது முடிவு எடுத்த அனுகுவது தானே ஒவ்வொரு பிரச்சினைகளையும் சம்சுல் இஸ்லாம் சங்கமும் எல்லா சங்கத்தின் வழக்கம் மற்றும் நெறிமுறை. ஹைதர் அலி ஆலிம் அவர்களின் விசயத்தில் சங்கம் போர்கால அடிப்படையில் 24 மணி நேரத்துக்குள் பயான் செய்ய தடை விதிதத்தின் மர்மம் என்ன?

3.   மற்ற இரண்டு நிர்வாகிகளை புறந்தள்ளி முன்று நிர்வாகிகளை கொண்டு முடிவு எடுக்கும் அளவுக்கு அப்படி என்ன அவசர நிகழ்வு நடத்துவிட்டது?

4.   ஷம்சுல் இஸ்லாம் சங்கத்துக்கு உட்பட்ட ஆயிசா மகளிர் அரங்கில் நடைபெரும் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் பயான் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை மட்டும் இணைத்தில் அவசர அவசரமாக போட்ட மர்மம் என்ன?

5.   ஷம்சுல் இஸ்லாம் சங்கம் எப்போது ஊரில் உள்ள சங்கங்களுக்கு (மேலதெரு ஜும்மா பள்ளி சங்கம் உட்பட)  கட்டளையிடும் அதிகாரம் பெற்றது?

6.  இந்தியாவில் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என பிரச்சாரம் செய்து வரும் சங்க்பரிவார்களைப் போல் ஒரு முஸ்லிமை  "தீவிரவாதி" என்று பிரச்சாரம்    செய்து வரும் சகோ உமர்தம்பி மீது சம்சுல் இஸ்லாம் சங்கம் என்ன நடவடிக்க எடுக்க போகிறது?

என்று இப்படி பல கேள்விகள் அடுக்கிக்கொண்டே போகலாம். நடுநிலையான இந்த கேள்விகளுக்கு சரியான ஷம்சுல் இஸ்லாம் சங்கம் பதிலை மக்கள் மத்தியில் வைக்க வேண்டும்

நேற்று 30-08-2012 அன்று இரவு சித்தீக் பள்ளி முஹல்லா சகோதரர்கள் சிலரை ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர், துனை தலைவர், துனை செயலர், பேரூராட்சி தலைவர் ஆகியோர் அழைத்து பேசினார்கள். இதில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் சொற்பொழிவில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையில்லை என்று ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர், துனை தலைவர், துனை செயலர், பேரூராட்சி தலைவர் ஆகியோர் ஒருமனதாக வந்தவர்கள் முன்னிலையில் ஒத்துக்கொண்டார்கள். ஆனால் சம்சுல் இஸ்லாம் சங்கம் ஆயிசா மகளிர் அரங்கம் மற்றும் மேலத்தெரு ஜும்மா பள்ளிக்கு அனுப்பிய கடித்தத்தில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு தொடர்பான காரணங்களை கூறியே அவரை மார்க்க சொற்பொழிவாற்ற வேண்டாம் என்று கூறிப்பிட்டுள்ளார்கள். இது அப்பட்டமான இரட்டை நிலைபாடு என்பது நிரூபனமாகியுள்ளது. சித்திக் பள்ளி முஹல்லா சகோதரர்களிடம் ஒரு நிலை, சங்கம் எழுதிய கடித்தத்தில் ஒரு நிலை. இதில் நிறைய மர்மங்கள் உள்ளது என்பது மட்டும் உண்மை. (சித்தீக் பள்ளி முஹல்லாவாசிகளிடம் சம்சும் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் உரையாடிய ஒழிப்பேழை தேவை பட்டால் இன்ஷா அல்லாஹ் இணையத்தில் வெளியிடுவோம்).

இந்நிலையில் மேலத்தெரு பெரிய ஜும்மா பள்ளியில் வழக்கம் போல் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ஜும்மா பயான் (31-08-2012) நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் தகவல்கள் விரைவில்இன்ஷா அல்லாஹ்.
-- LMS Mohamed Yousuf

6 comments:

  1. Mashaa Allah well said.,

    Sangam and some so called members misleading our people

    Allah knows all

    Ya Allah please save Hyder ali alim from these bad evils and give hidaya to misleading people.

    ReplyDelete
  2. சுய நலத்தோடும் ஊர்க்கு பயந்தும் மின்னணு ஊடகங்கள் நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், திராணியுடன் உண்மையை உலகுக்கு வெளிக்கொண்டு வந்த அதிரை தண்டர்க்கு வாழ்த்துக்கள்.உண்மையில் அதிரை தண்டர் அநியாயக்காரர்களுக்கு 'பேரிடியே'...

    இறை மார்க்க பிரச்சாரத்தை தடுப்பதன் மூலம் படைத்த அல்லாஹ்வுக்கு எதிராக போர் செய்ய தயாராக வேண்டாம். இனியாவது நடுநிலையோடு செயல்படுவது ஊர்ப்பெரியவர்களுக்கு!? நல்லது. இறைமார்க்கத்திற்கு எதிராக சூழ்ச்சி செய்தோரின் நிலை குறித்து சிந்தித்து செயல்படுங்கள். இல்லையென்றால் வரலாற்றுப் பாடம் கற்பிக்கப்படுவீர்கள்.

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ். தெள்ள தெளிவான தகவல்கள். “சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது. நிச்சயம் அசத்தியம் அழியக்கூடியதே”.

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும்.



    //1. ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவை தடை செய்யும் அளவுக்கு அவர் என்ன மன்னிக்க முடியாத குற்றம் செய்தார்? //
    வட்டி மூசாக்களை பற்றி பகிரங்கமாக பேசியதுதான்.மன்னிக்க முடியாத குற்றமாக இருக்குமோ?


    நீதி, நேர்மை,நியாயமற்ற சங்கத்தை கலைக்கப்படவேண்டும்.

    ReplyDelete
  5. unmayai urakka sonna adirai thunderku naan thondan bayanuku thadai yendra seythiyai veliyitta adirai express .vimarsanangalukku thadai vithithirupathin moolam nayavanjakathai kattukirathu

    ReplyDelete
  6. ooril ulla anaithu aalimgalum hyder ali moulana bayanku thadai vithithirukkum seythiyai kandikamal vaai moodi mounamaga irrupathu yen athu sari neengal intha nigalvukaka thaane kathukondu iruntheergal piragu yeppdi intha seythiai kandipeergal

    ReplyDelete