14 Sep 2012
புதுடெல்லி:கேம்பஸ் ஜனநாயகம் கோரி கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவிலான பிரச்சாரத்தை துவக்க உள்ளது. கல்லூரி, பல்கலை வளாகங்களை ஜனநாயக மயமாக்குவதற்காக மாணவர்களிடம் விழிப்புணர்வூட்டும் பிரச்சாரம் வருகிற செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதிவரை நடைபெற உள்ளது.
இந்தியா-இஸ்ரேல் கூட்டு கல்வித் திட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என்று கேம்பஸ்ஃப்ரண்ட் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய திட்டங்களின் மூலம் தங்களது ரகசிய அஜண்டாக்களை நிறைவேற்றுவதே இஸ்ரேலின் வரலாறு ஆகும்.
தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் பெயரால் உயர் கல்விகற்ற முஸ்லிம் இளைஞர்களை எவ்வித காரணமுமின்றி கைது செய்யும் போக்கை மத்திய-மாநில அரசுகள் கைவிட வேண்டும். அஸ்ஸாமில் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பை உறுதிச்செய்ய அரசு தயாராக வேண்டும் என்று கேம்பஸ் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுவில் அகில இந்திய தலைவர் அனீசுஸ்ஸமான், பொதுச் செயலாளர்கள் ஆஸிஃப் மிர்ஸா, சி.ஏ.ரவூஃப், ஸாலிம் ஜஹாங்கீர்,முஹம்மது ஷாக்கிர், அப்துல் ரஹீம், டி.சி.நிப்ராஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
0 comments:
Post a Comment