Wednesday, September 19, 2012

எங்கள் பதிலடியில் இஸ்ரேலில் ஒன்றுமே எஞ்சியிருக்காது: ஈரான் எச்சரிக்கை


டெஹ்ரான்: ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுமேயானால் தாங்கள் கொடுக்கும் பதிலடியில் இஸ்ரேலில் எதுவுமே மிஞ்சியிருக்காது என்று ஈரான் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானையொட்டிய வளைகுடா கடற்பரப்பில் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் மிகப் பெரிய போர் ஒத்திகையை மேற்கொள்ள உள்ளன. இதற்கான பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள் வளைகுடா கடற்பரப்பில் முகாமிட்டு வருகின்றன. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் ஈரான் ராணுவ தளபதி முகமது ஜபாரி டெஹ்ரானில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் எப்படி பதிலடி கொடுப்பது என்பதில் தெளிவாக இருக்கிறோம். நிச்சயமாக சொல்கிறோம்.. இஸ்ரேலில் எதுவுமே மிச்சமிருக்காது.
அமெரிக்கா எங்கள் மீது போர் தொடுக்குமேயானால் மேற்குலகநாடுகளும் , அமெரிக்காவும் ஒரு பக்கமும் நாங்கள் ஒருபக்கமுமாக நிற்போம். இது இயற்கையானது. அதேபோல் போர் நடைபெறும் போது ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்படுவதுவம் இயல்பான ஒன்றானதுதான்.
லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஏற்கெனவே இஸ்ரேலை இலக்கு வைத்து 40 ஆயிரம் ஏவுகணைகளை நிறுத்தியுள்ளனர். எங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அந்நாடு மீது தாக்குதல் நடத்துமாறு ஹிஸ்புல் அமைப்பை கேட்டுக் கொள்வோம். அப்புறம் இஸ்ரேலில் எதுவுமே எஞ்சியிருக்காது என்றார்.
ஈரான் தரப்பிலிருந்து இதுவரை இப்படி விரிவாக பதிலடித்தாக்குதல் பற்றி பேசுவது இதுவே முதல்முறை என்பதால் அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்திருக்கிறது

0 comments:

Post a Comment