Friday, September 28, 2012

சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர்: வழக்கை மும்பைக்கு மாற்ற உச்சநீதிமன்றம் அனுமதி!

Sohrabuddin fake encounter-SC shifts case to Mumbai

புதுடெல்லி:குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த சொஹ்ரபுத்தீன் ஷேக் மற்றும் அவரது மனைவி கெளஸர்பீயின் போலி என்கவுண்டர் கொலை வழக்கின் விசாரணையை அம்மாநிலத்தில் இருந்து மும்பைக்கு மாற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதேவேளையில் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடியின் நெருங்கிய நண்பரும், குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்துச் செய்யக்கோரும் சி.பி.ஐயின் மனு தள்ளுபடிச்செய்யப்பட்டது.
குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில் அம்மாநிலத்திற்கு செல்லவும், அங்கு பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளவும் தடையில்லை என்று நீதிபதிகளான அஃப்தாப் ஆலம் மற்றும் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தெரிவித்தது.
கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சொஹ்ரபுத்தீன் ஷேக்கும், அவரது மனைவி கெளஸர்பீயும் குஜராத் தீவிரவாத எதிர்ப்பு படையினரால் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டு மாநிலம் காந்தி நகருக்கு அருகே வைத்து போலி என்கவுண்டர் நாடகம் மூலம் அநியாயமாக கொலைச் செய்யப்பட்டனர்.
இவ்வழக்கு தொடர்பாக கடந்த 2010-ஆம் ஆண்டு அமித் ஷாவை சி.பி.ஐ கைது செய்தது. அமித் ஷா தான் போலி என்கவுண்டர் நாடகத்தின் முக்கிய சூத்திரதாரி என்பதை சி.பி.ஐ கண்டறிந்தது.
அமித் ஷாவுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. அமித் ஷாவுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்தும், சாட்சிகளை மிரட்டும் வாய்ப்பு இருப்பதால் வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரியும் சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தை அணுகியது.
சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்ட அமித் ஷா, குஜராத்தில் நுழையக் கூடாது என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது. அந்த கட்டுப்பாடு தற்போது நீக்கப்பட்டுள்ளது. சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் முக்கிய சாட்சியான துளசி பிரஜாபதியை போலி என்கவுண்டரில் கொலைச் செய்த வழக்கிலும் அமித்ஷாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ தாக்கல் செய்துள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு சொஹ்ரபுத்தீன் ஷேக்கை கொலைச்செய்த அதே போலீஸ் கும்பல் துளசி பிரஜாபதியையும் கொலைச் செய்தது

0 comments:

Post a Comment