Monday, September 17, 2012

திரைப்படம் மூலம் குழப்பம் உண்டாக்கும் யூதர்கள்!



முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும்  முஹம்மது நபி(ஸல்) அவர்களை மிக மோசமாக அவமதிக்கும் திரைப்படம் ஒன்று அமெரிக்காவில் வசிக்கும்  யூதன் ஒருவனால் தயாரிக்கப்பட்டுள்ளது. 
இன்னும் வெளிவராத இந்த படத்தின் ட்ரைலர் யூட் டுயுப்யில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து உலகம் முழுவதிலும் வாழும் முஸ்லிம்கள் இதற்க்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
உலகம் முழுவதும் அமெரிக்காவை கண்டித்து பலவகையான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவிற்கு எதிராக வீதிகளில் இறங்கி  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் SDPI கட்சி, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இந்திய தவ்கீத் ஜமாஅத் போன்ற அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.  

உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த இஸ்லாம் எதிர்ப்பு திரைப்படத்தை தயாரித்தவருடன் தொடர்பு கொண்டிருந்த கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒருவரிடம் FBI போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். 
இந்நிலையில் அமெரிக்க கலிபோர்னிய மாநில தலைநகர் சாக்கரமேண்டோவில் அமைந்துள்ள மஸ்ஜித் நூர் பள்ளியில் நேற்று வெளிக்கிழமை ஜும்மா தொழுகையின் போது இம்மாம் கூறியாதாவது. இந்த திரைப்படத்தின் மூலம் டெவில் (DEVIL) எதை செய்ய நாடியதோ அதை செய்துவிட்டது. முஸ்லிம்கள் உணர்ச்சி வயப்பட்டு லிபியாவில் உள்ள அமெரிக்க தூதர் உட்பட 3பேரை கொன்றதை இஸ்லாம் அனுமதிக்க வில்லை, இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.

இது போன்று விசயங்களில் முஸ்லிம்கள் தங்களது எதிர்ப்புகளை ஜனநாயக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டும் என்றார். இதை எதிர்த்து அமெரிக்கா தழுவிய பிரச்சாரத்தையும், சட்ட ரீதியான நடவடிக்கையையும் தாங்கள் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். அமெரிக்க உலகின் கிரீன் லேன்ட், இங்கே அனைத்து மக்களும் சமமாக நடத்தப்படுகின்றனர். உலகின் சுதந்திர பூமி என்று அமெரிக்காவை சொல்லலாம் என்றார். இதனால் முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை வன்மையாக கண்டித்தார்.

0 comments:

Post a Comment