27 Sep 2012
வாஷிங்டன்:அமெரிக்கா தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டால் ஈரான்-அமெரிக்கா இடையேயான உறவு மேம்பட வாய்ப்புள்ளதாக ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் கூறியுள்ளார். ஈரான் தனது சொந்த காலில் நிற்கும் தேசம் என்பதை அமெரிக்க தூதர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
ஐ.நா பொது அவையின் வருடாந்திர கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றுள்ள அஹ்மத் நஜாத், அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்றார்.
அப்போது அவர்; “இரு நாடுகள் இடையேயான உறவு மேம்படவேண்டுமென்றால் ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு அமெரிக்கா பதிலளிக்க வேண்டும். அணுசக்தி தொடர்பான பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண முன்வர வேண்டும். நம்பிக்கை அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். எனில் இரு நாடுகள் இடையேயான உறவு மேம்பட வாய்ப்புள்ளது. ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் அமெரிக்காவின் அணுகுமுறை, ஜனநாயகத்தை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம் என்ற அந்நாட்டின் கூற்றுக்கு முரணாக உள்ளது.” இவ்வாறு நஜாத் கூறினார்.
0 comments:
Post a Comment