Thursday, September 27, 2012

கூடங்குளம் போராட்டத்தை நசுக்க தொடரும் மின்வெட்டு!


Sep 27: கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக இடிந்தகரையில் மக்கள் மணலுக்குள் தங்களை புதைத்து கொண்டு புதுவிதமான போராட்டத்தை நடத்தினர்.

இடிந்தகரையில் சர்ச் வளாகத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். பின்னர் இடிந்தகரை கடற்கரைக்கு சென்று தானும்  மணலுக்குள் உடலை புதைத்தபடி, மக்கள் போராட்டத்தில் பங்கேற்றார். அதில் உதயகுமா
ர், புஷ்பராயன் உள்ளிட்ட தலைவர்களும் மண்ணில் புதைந்து தாங்கள் மக்கள் தலைவர்கள் என்பதை நிருபித்தனர்.

இந்நிலையில் தென் மாவட்டமான நெல்லை, தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களின் கடற்கரையோர பகுதிகள் தொடர் மின்வெட்டு க்கு ஆளாகி வருகின்றது. தென்மாட்டங்களின் கடலோர கிராமங்களான தூத்துக்குடி பீச்ரோடு, மாதாகோவில், திரேஸ்புறம், பழையகாயல், புன்னகையால், காயல்பட்டினம், திருச்செந்தூர் அமலிநகர், ஆலந்தலை, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, பெரியதாழை, உவரி, கூடுதலை, கூட்டபனை, இடிந்தகரை, போன்ற கிராமங்களின் மீனவர்கள் மீன் பிடித் தொழிலையே ஜீவாதாரமாக கொண்டுள்ளனர்.
 

இப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள்,  நாட்டுப்பட்குகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த மீனவர்கள் பிடித்துவரும் மீன்களை பதப்படுத்தி சந்தைகளுக்கு கொண்டு சொல்லவும், வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யவும் ஜஸ்கட்டிகள் தேவைப்படுகின்றது.  இதற்காக அப்பகுதிகளில் ஜஸ்கம்பெனி பிளாண்டகள் செயல்பட்டு வருகின்றன. தற்போதைய அறிவிக்கப்படாத மின் வெட்டு காரனமாக ஜஸ் பிளாண்ட்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் இந்த தொழிலையே நம்பியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அரசுக்கு தினமும் 70 லட்சம் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது அதோடு கடலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான மீனவகுடும்பங்களின் அன்றாட வருமானம் பாதிக்கப்பட்ட தோடு மீன் சந்தையில் பணப்புழக்கம் கடுமையாகச் சரிந்து உள்ளது. கூடங்குளம் போராட்டத்தை வலுவிழக்க செய்ய தென்மாட்டங்களில் தொடர் மின்வெட்டு திட்டமிட்டு நடத்தப்படுகிறது. இதற்க்கு முன்னாள் தடையின்றி கிடைத்த மின்சாரங்கள் இப்பொழுது எங்கே போனது. தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழ் நாட்டுக்கு போதுமானது. அதை அண்டை மாநிலங்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வாரியிறைத்து விட்டு மக்கள் போராட்டத்தை நசுக்க பல்வேறு கேவலமான உக்திகளை கையாண்டு வருகின்றன மத்திய, மாநில அரசுகள்.

0 comments:

Post a Comment