Wednesday, October 10, 2012

பூரண மதுவிலக்கை அமல்படுத்தாவிட்டால் மதுபானக் கடைகளை ‘அடித்து நொறுக்கும் போராட்டம் நடத்தப்படும்’ – எஸ்.டி.பி.ஐ

எஸ்.டி.பி.ஐ

சென்னை:பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு தவறும் பட்சத்தில், மக்களை ஒன்று திரட்டி மதுபானக் கடைகளை  ‘அடித்து நொறுக்கும் போராட்டம் நடத்தப்படும்’ என்று எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் தெரிவித்துள்ளார். பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்தக்கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பூரண மதுவிலக்கை கோரி சென்னையில் ஏழுகிணறு பகுதியில்  பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அப் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர்  கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி;  “தமிழகத்தில் கந்து வட்டி லாட்டரி சீட்டு, ஆகியவற்றை தடை செய்த தமிழக அரசு மதுவை தடை செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். பெண்களின் திருமணத்திற்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடை மூலம் ஆயிரக்கணக்கான பெண்களின் தாலி அறுபடக் காரணமாக இருக்கிறது. தமிழகத்தில் நடைபெறும் அனைத்து குற்றங்களுக்கும் மூல காரணமாக இருக்கக்கூடிய மதுவினை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.
மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி, வருகின்ற அக்டோபர் 17 ல் தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் நடத்தவிருக்கிறோம். அதன் பிறகும் மதுவை தடைசெய்ய தமிழக அரசு தவறும் பட்சத்தில், அனைத்து கட்சிகளையும், பொது மக்களையும் ஒன்று திரட்டி மதுபானக் கடைகளை  ‘அடித்து நொறுக்கும் போராட்டம் நடத்தப்படும்.” என்று தெரிவித்தார்.

0 comments:

Post a Comment