Sunday, October 7, 2012

மக்களை சந்திப்போம் ! உண்மையை சொல்வோம் !! அவதூறு பிரச்சாரங்களுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய அளவில் பிரச்சாரம்


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் கடந்த அக்டோபர் 2 மற்றும் 3 ஆகியதேதிகளில் கோவையில் நடைபெற்றது. இந்த செயற்குழுவிற்கு மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில்தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ஏ. ஹாலித் முஹம்மது, செயலாளர்கள் ஏ. பைசல்அஹமது, எம். ஷேக் முஹம்மது அன்சாரி, பொருளாளர் அஸ்கர் இப்ராஹிம் மற்றும் மாநில செயற்குழுஉறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய துணைத் தலைவர் எம். முஹம்மது அலி ஜின்னா, தேசிய செயற்குழு உறுப்பினர்கள் யா முகைதீன் மற்றும் ஓ.எம்.ஏ. சலாம்ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் :

1. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒடுக்கப்பட்ட சமூகங்களை அனைத்து தளங்களிலும் சக்திப்படுத்தஜனநாயக வழிமுறைகளில் போராடும் தேசிய அளவிலான ஒரு மக்கள் இயக்கமாகும். ஒடுக்கப்பட்டசமூகங்கள் சக்திபெறுவதை விரும்பாத ஆதிக்க சக்திகள் பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிராக பலஅவதூறுகளை பரப்பி வருகிறார்கள். உளவுத்துறையிலும், காவல் துறையிலும் உள்ள ஒரு சிலஇந்துத்துவா சிந்தனையுடைய அதிகாரிகளும், ஒரு சில ஊடகங்களும் இத்தகைய வதந்திகளை பரப்புவதில் தனி அக்கறை காட்டிவருகின்றனர். ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்திற்கு தடைகளைபோட முயற்சிக்கும் இத்தகைய அவதூறுகளுக்கு எதிராக வருகின்ற அக்டோபர் 10ம் முதல் நவம்பர் 10ம்வரை “பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்? மக்களை சந்திப்போம்! உண்மையை சொல்வோம்!!” எனும் முழக்கத்துடன் தேசிய அளவிலான பிரச்சாரத்தை மேற்கொள்ள பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. இதனடிப்படையில் இந்தப் பிரச்சõரத்தை தமிழக தழுவிய அளவில் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதில் தெருமுனைப் பிரச்சாரங்கள், வீடுவீடாக நோட்டீஸ் விநியோகம், போஸ்டர்பிரச்சாரம், ஆட்டோ பிரச்சாரம் ஆகியவற்றின் மூலம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆற்றிவரும் பணிகள், பாப்புலர்ஃப்ரண்டிற்கு எதிரான அவதூறுகளின் பின்னணி ஆகியவற்றின் மூலம் உண்மை நிலையை மக்களிடம்எடுத்து சொல்வோம். மேலும் சென்னை, மதுரை, கோவை, ஆகிய மூன்று இடங்களில் மண்டல மாநாடுகள்நடத்த தீர்மானிக்கப்பட்டது.

2. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாகஎதிர்க்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரத்தையும் மலிவான விலையையும் எதிர்த்து ஒருசாதாரண மளிகைகடை வியாபாரியால் போட்டிபோட இயலாது. எனவே சில்லரை வர்த்தகத்தில் அந்நியமுதலீட்டை அனுமதிப்பது நமது மளிகை வியாபரிகளை பெரிதாக பாதிக்கும். இதன் மூலம் பணக்காரன் ஏழைக்கிடையிலான இடைவேளி மேலும் விரிவடையும். இத்தகைய ஏகாதிபத்திய கொள்கையைபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடுமையாக எதிர்க்கிறது. இந்த சில்லரை வர்த்தகத்தில் அந்நியமுதலிட்டை அனுமதிக்கமாட்டோம் என்ற மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பை பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்கின்றது.

3. மருத்துவ கல்லூரிகளில் பொது நுழைவுத் தேர்வு முறையை அமுல்படுத்த முயற்சி செய்யும் மத்தியஅரசை பாப்புலர் ஃப்ரண்ட் கண்டிக்கிறது. நுழைவு தேர்வினால் கிராமப் புற மாணவர்களுக்கு மருத்துவகல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை. இந்த பிரச்சனையை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஏற்கனவேநுழைவு தேர்வினை ரத்து செய்து சட்டசபையில் சட்டம் இயற்றியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசுமீண்டும் நுழைவு தேர்வினை அமுல்படுதத முயற்சி செய்கிறது. மாண்புமிகு தமிழக முதல்வர்அவர்களும் இந்த நுழைவு தேர்வினை எதிர்த்து பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தமிழக முதல்வர்அவர்களின் இந்த நிலைப்பாட்டை பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்கிறது.

4. கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் 14 மணி நேரம் மின்வெட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையைகடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக இரவில் தொடர்ந்து நடக்கும் மின் வெட்டால் பொதுமக்கள்நிம்மதியாக தூங்கக் கூட இயலவில்லை. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மின்வெட்டால்பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நீண்டநேர மின்வெட்டுகளை சரி செய்ய உரிய நடவடிக்கைகளைமேற்கொள்ளுமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.

0 comments:

Post a Comment