Monday, October 1, 2012

மக்கள் நீதிமன்றத்தில் கதறி அழுத அப்துல் நாஸர் மஃதனியின் மகன்!

மஃதனியின் மகன் உமர் முக்தார்

புதுடெல்லி: “எனது வாப்பாவை(தந்தை) காணும் பொழுதெல்லாம் நான் உணர்ச்சியை கட்டுப்படுத்திக் கொள்வேன். ஆனால், கடைசியாக நான் அவரை சந்தித்தபொழுது என்னால் அடக்க முடியவில்லை.” என்று அப்துல் நாஸர் மஃதனியின் மகன் உமர் முக்தார் மக்கள் நீதிமன்றத்தில் கதறி அழுத காட்சி அனைவரையும் நெகிழ்ச்சி அடையவைத்தது. ஜோடிக்கப்பட்ட வழக்குகளுக்கு எதிரான விசாரணையை நடத்திய மக்கள் நீதிமன்றத்தில் கலந்துகொண்டு தனது தந்தைக்கு ஏற்பட்ட துயரங்களை எடுத்துரைத்தார் உமர் முக்தார்.
“இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் சிறைக்குச் சென்றபொழுது கண்களின் பார்வை இழந்துவிட்டதாக கூறிய வாப்பா, ஒரு கண்ணை மூடிக்கொண்டு பேசினார். எனது பிள்ளைகளை இனி காண முடியுமா? என கவலை தெரிவித்த அவரது கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தன. என்னால் எனது உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. சிறுவயது முதலே நான் போர்டிங் ஸ்கூலில் தங்கி பயின்று வருகிறேன். அரவணைப்பிற்கு பதிலாக என்னைச் சுற்றிலும் நிறைந்திருந்தது தீவிரவாத முத்திரையாகும். தன்னைப் போன்ற ஏராளமான நிரபராதிகள் நாட்டின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் விடுதலைக்காக பாடுபாட நான் வழக்கறிஞர் ஆகவேண்டும் என்பதே எனது வாப்பாவின் விருப்பமாகும்.” என்று உமர் முக்தார் கூறினார்

0 comments:

Post a Comment