Tuesday, October 23, 2012

கூடங்குளம்:ஜப்பானில் ஆதரவுப் போராட்டம்!

japan-anti nuclear protest

டோக்கியோ:கூடங்குளத்தில் அணு உலை எதிர்ப்பாளர்கள் நடத்திவரும் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்திற்கு உலகின் பல நாடுகளில் ஆதரவு பெருகி வருகிறது.
முன்னர், ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றிருந்தன. இந்நிலையில் ஜப்பானின் பிரபல நோ நியூக் ஏசியா ஃபாரத்தின் தலைமையில் கடந்த வாரம் ஒஸாகாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன்னால் சுற்றுச்சூழல் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
கடந்த செப்டம்பர் மாதம் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் நடத்திய அராஜக தாக்குதலை கண்டித்து புகுஷிமா அணு உலையால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்தி தங்கள் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தினர். இந்தியாவுடன் ஜப்பான் மேற்கொள்ளவிருக்கும் அணுசக்தி ஒத்துழைப்பைக் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டவும் இந்த போராட்டத்தை நோ நியூக் ஏசியா ஃபாரம் நடத்தியுள்ளது.
கூடங்குளத்தில் போலீஸ் நடத்திய தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை நடத்தவேண்டும். இந்தியாவில் நடைபெறும் அணு உலை எதிர்ப்பு போராட்டங்களை அடக்கி ஒடுக்குவதை நிறுத்துக! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இவ்வமைப்பு இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் அனுப்பியுள்ளது.

0 comments:

Post a Comment