Monday, October 15, 2012

பாப்புலர் ஃப்ரண்ட் வழங்கிய உயர் கல்விக் கடன் உதவி!

PFI Educatonal loan

சென்னை : 12ம்  வகுப்பு முடித்து விட்டு கல்லூரியில் சேர்ந்துள்ள ஏழை  மாணவ-மாணவியருக்கு தங்களின் கல்லூரி படிப்புக் கட்டணத்தைக் கட்ட  உதவும் வகையில் தேசிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வட்டியில்லா கடன் வழங்கி வருகிறது.
சென்ற ஆண்டு தேசிய அளவில் 24 லட்ச ரூபாய்க்கான கல்வி உதவி  வழங்கப்பட்டது. இவ்வாண்டும் பாப்புலர் ஃப்ரண்ட் செயல்படும் அனைத்து மாநிலங்களிலும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தக் கல்வி உதவியினைப் பெற மாணவ-மாணவியர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு உட்பட்டு தகுதியான மாணவ-மாணவியருக்கு கல்வி கடனுதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில்  மட்டும் 54 மாணவ-மாணவியர் கல்விக் கடனுதவி வழங்க தேர்வு செய்யப்பட்டார்கள். கடந்த அக்டோபர் 14ம் தேதி சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவியருக்கு கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டன.
சென்னையில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட்டின் மாநிலப் பொதுச் செயலாளர் ஏ. காலித் முஹம்மது தலைமை தாங்கினார். மாவட்டச்  செயலாளர் ஷாஹித் வரவேற்புரை வழங்கினார். சமூக மேம்பாட்டுத் துறையின் மாவட்ட பொறுப்பாளர் ஜுனைத் அன்சாரீ சமூக மேம்பாட்டுத் துறையின் மூலம் பாப்புலர் ஃப்ரண்ட் மேற்கொண்டு வரும் சேவைகளை விளக்கினார்.
அதனைத் தொடர்ந்து மாநிலப் பொதுச் செயலாளர் ஏ. காலித் முஹம்மது சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் மாணவ மாணவியருக்கான கல்வி உதவித் தொகைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியரும் , பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
இதேபோல் கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநிலத் தலைவர் A.S. இஸ்மாயீல் தலைமையில் உயர்கல்விக்கான கடன் உதவித் தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், மாணவிகள், அவர்களின்  பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள்

0 comments:

Post a Comment