Wednesday, October 3, 2012

மாணவன் தற்கொலை - நீதிக்காக போராட கேம்பஸ் ஃப்ரண்ட் அழைப்பு!


பட்டுக்கோட்டை சிவக்கொள்ளையை சேர்ந்த வெங்கடேசன் என்ற மாணவன் பள்ளிக்கொண்டானில் உள்ள பிரபலமான லாரல் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்துவருகிறார். தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் 25/09/2012 செவ்வாய்கிழமை அன்று காலை பள்ளி ஆசிரியர் மாணவனை திட்டி வகுப்பறையைவிட்டு வெளியில் நிறுத்தியதால் மனம் உடைந்து மாலை வீட்டிற்கு சென்ற மாணவன் வெங்கடேசன் அன்று இரவு தன் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து இறந்த மாணவனின் பெற்றோரை நேரில் சந்தித்து இரங்கலை தெரிவித்துக் கொண்ட தேசிய மாணவ இயக்கமான கேம்பஸ் ஃப்ரண்ட்-ன் மாநில தலைவர் Z.முஹம்மது தம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிக மதிப்பெண்கள் பெற்ற பள்ளி என விளம்பரம் செய்து பணம் சம்பாதிக்கும் நோக்குடன் மாணவர்களை சித்திரவதை செய்ய 'பனிஷ்மென்ட் ரூம்' என்ற தனியறையமைத்து சித்திரவதைக் கூடமாக செயல்படும் லாரல் பள்ளியை தமிழக அரசே ஏற்று நடத்துவதோடு மாணவனின் உயிரிழப்பிற்கு காரணமான பள்ளி நிர்வாகிகளையும் கைது செய்ய வேண்டும். 

இவ்வழக்கின் விசாரணை அதிகாரியான பட்டுக்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் முத்துலெட்சுமியின் போக்கு சந்தேகத்திற்கிடமாக இருப்பதாலும் லாரல் பள்ளி நிர்வாகியின் உறவினரான கும்பகோணம் காவல் துணைக் கண்கானிப்பாளர் (DSP) சிவபாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகளின் குறிக்கீடுகள் இருப்பதாலும் இவ்வழக்கை தமிழக அரசு CBCID விசாரனை மாற்றி உத்தரவிட வேண்டும் எனவும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது. 

மேலும் உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு நீதிக் கிடைக்க கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அனைத்து விதமான போராட்டங்களையும் கையில் எடுக்கும் நீதிக்காக போராட அனைவரும் முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

0 comments:

Post a Comment