1
மதுரை :அரசு மற்றும் போலீஸ்-உளவுத்துறை ஏஜன்சிகளைச் சார்ந்த சிலர் வகுப்புவாத சிந்தனையுடன் பாப்புலர் ஃப்ரண்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர். இதன் மூலம் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கான உரிமைப் போராட்டங்களை சீர்குலைக்கின்றனர். அவதூறுப் பிரச்சாரங்களின் நோக்கம், இந்த பிரிவினரை சக்திப்படுத்துவதற்காக பாடுபடும் இயக்கத்திற்கு எதிரான சூழ்ச்சியாகும். இது அரசியல் சாசனம் கூறும் மதசார்பற்ற ஜனநாயக விழுமியங்களை மறுப்பதாகும். லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ள இவ்வியக்கத்தின் செயல்பாடுகள் சில சுயநலவாதிகளுக்கு எரிச்சலூட்டியுள்ளது. அதன் விளைவாகவே அவர்கள் இவ்வியக்கத்திற்கு எதிராக மறைமுக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள். இத்தகையதொரு சூழலில் “ Why Popular Front?(பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்?) " என்ற தலைப்பில் அக்டோபர் 10 முதல் நவம்பர் 10 வரை தேசிய அளவிலான பிரச்சாரத்தை நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு தீர்மானித்துள்ளது. இப்பிரச்சாரத்தின் வாயிலாக பாப்புலர் ஃப்ர்ண்ட் ஆற்றி வரும் பணிகள், பாப்புலர் ஃப்ர்ண்டிற்கு எதிரான அவதூறுகளின் பின்னணி ஆகியன குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
அந்த பிரசாரத்தின் மதுரை மண்டலத்திற்கான பேச்சாளர் பயிற்சி முகாம் திருச்சியில் 10.10.2012 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரச்சார பயிற்சி வகுப்பை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் காலித் அவர்கள் வழங்கினார்.. இதில் மதுரை மண்டலத்தை சேர்ந்த பல பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்
0 comments:
Post a Comment