ரத்தம் என்பது மனித உயிர்களில் மிக முக்கியமான ஒன்றாகும்.ரத்தம் என்பவது இறைவன் கொடுத்த மிகப்பெரிய அருட்கொடையாகும்.
அதிராம்பட்டினத்தை சேர்ந்த நகர முஸ்லிம் லீக் இளைஞர் அணி தலைவர் சாகுல் ஹமீது அவர்கள் கடந்த 12 வருடங்களாக 23 தடைவக்குமேல் இரத்த தானம் செய்து பாராட்டு சான்றிதழ்களை பெற்றுள்ளார்.
நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் தனது இளமை காலம் தொட்டே சமுக சேவையாற்றி வரும் இவர் அவசர காலத்தில் இரத்தம் கொடுப்போரில் முதன்மை வகிக்கிறார் இவரது இந்த சேவையை போற்றும் வகையில் திமுக வை சார்ந்த அதிரை நகர சேர்மன் எஸ் ஹெட்ச் அஸ்லம் ஒரு விழாவில் பொழுது கேடயம் கொடுத்து கவுரவிக்கப்பட்டுளார்.
இது பற்றி அவரிடம் கேட்டபொழுது.....
இன்றைய அவசர உலகில் பல்வேறு வகையான நிகழ்வுகள் தினம்தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
நாம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விபத்துக்களைச் சந்திக்கின்றோம்.அதுபோல் சமிபத்தில் ஊரெங்கும் பரவும் டெங்கு போன்ற கொடிய நோய்களின் தாக்கத்திலிருந்து மீள மருத்துவர்கள் இரத்தம் ஏற்ற சொல்லுகிறார்கள்.
அந்த நேரத்தில் யார் எவர் என்று கூட பாராமல் இந்த சேவையை செய்ய இன்றைய இளைஞர்கள் முன்வர வேண்டும் இதனால் அனாவாசிய உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்று கூறினார்.
இதற்க்கான குறைந்த அளவே இரத்தம் உறிஞ்சப்பட்டு நோயாளிக்கு ஏற்றபடுகிறது இரத்தம் கொடுத்தவரும் புத்துணர்வு பெற்று கொள்வார் என்பதில் எல்முனையளவும் சந்தேகம் இல்லை .
0 comments:
Post a Comment