Tuesday, October 23, 2012

குர்பானிக்குத்தடை: பக்ரீத் பெருநாளை கருப்பு தினமாக கொண்டாட முடிவு! கருப்பு துணி கட்டிக்கொண்டு போராடவும் முடிவு!!


OCT 23, உத்தரபிரதேசம் ஆசம்கர் மாவட்டம் முபாரக்பூர் தாலுக்காவில் அமைந்துள்ளது "லோஹ்ரா" கிராமம், கடந்த 60 ஆண்டுகளாக முஸ்லிம் குடும்பங்கள் இந்த ஊரில் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தின் எந்த பகுதியிலும் "குர்பானி"க்கான பிராணிகளை அறுப்பதற்கு தடை உள்ளது.
ஒவ்வொரு வருடமும் குர்பானி கொடுப்பதற்கு கடும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.
இந்த வருடமும் "குர்பானி" நிறைவேற்றும் விஷயத்தில் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் கடும் பிரச்சினைகள் எற்படுப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளியன்று ஒன்று கூடிய முஸ்லிம்கள், இதுகுறித்து ஆலோசித்தனர்.
எந்த முயற்சியும் பலனளிக்காததால், நேற்று (22/10) மீண்டும் ஒன்று கூடிய முஸ்லிம்கள், பக்ரீத் பெருநாள் தினத்தில் தங்கள் "கைகள் மட்டும் நெற்றியில் கறுப்புத்துணி" கட்டிய வண்ணம் இந்த பெருநாளை கடைபிடிக்க முடிவெடுத்துள்ளனர்.
எங்கள் மீது இழைக்கப்படும் அநீதிக்கெதிராக போராட ,எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை,என்கின்றனர் "லோஹ்ரா" கிராமவாசிகள்.
மேலும், பெருநாள் அன்று பழைய ஆடைகள் அணிந்து எளிமையான முறையில் பெருநாளை கழிக்கவும் ஒருமனதாக முடிவெடுத்துள்ளனர்.
இந்திய அரசியல் சாசனம் வழங்கும் "மத வழிபாடு சுதந்திர அடிப்படை"யில், 35 கோடி முஸ்லிம்கள் வாழும் இந்தியாவில் இஸ்லாமியக்கடமையான "குர்பானி"யை நிறைவேற்ற முடியவில்லை என்பது வேதனை அளிப்பதாக, நீதிமன்ற படிகளை ஏறி இறங்கி வரும், மன்சூர் என்பவர் தெரிவித்தார்.
சிறுபான்மை சமூக காவலர்களாக காட்டிக்கொள்ளும் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புக்களையும் "லோஹ்ரா" கிராம மக்கள் சாடுகின்றனர்.

0 comments:

Post a Comment