Wednesday, October 24, 2012

மகாராஷ்டிர ஆட்டுச்சந்தை : ரகளை செய்த ஆதிக்க சக்திகள் விரட்டியடிப்பு!


OCT 24, குர்பானிக்கான ஆட்டுச்சந்தையை அகற்றும் முயற்ச்சியில் ஈடுபட்ட ஆதிக்க சக்திகளை ஓட ஓட விரட்டியடித்தனர், மகாராஷ்டிர முஸ்லிம்கள்.
இது பற்றிய செய்தியாவது :
மகாராஷ்டிர மாநிலம் "மேம்பராக்கே" தொகுதிக்குட்பட்ட இடம் "கோசா" நகரம்.
கோசா நகரம், நாளுக்கு நாள் விரிவடைந்து வருவதால், முந்தய பக்ரீத் காலங்களில் ஆங்காங்கே ஆடு விற்பனை செய்து வந்த மக்கள், இம்முறை அப்துல் அஜீஸ் என்பவரின் ஏற்பாட்டின் பேரில், நகரத்தின் எல்லையில் தனியாருக்கு சொந்தமான ஒரு மைதானத்தை "தற்காலிக வாடகைக்கு" எடுத்து, ஆட்டுச்சந்தை செயல்பட்டு வந்தது.
கோசா நகராட்சி க்கு சொந்தமான ஆட்டு தொட்டியில் பக்ரீத் பெருநாள் அன்று, அனைத்து ஆடுகளையும் அறுக்கும் அளவிற்கு இடவசதி இல்லை.
எனவே, பக்ரீத் நாள் அன்று மட்டும், ஆடுகளை அறுத்து "குர்பானி" கடமைகளை நிறைவேற்றும் வண்ணம் அனைத்து வசதிகளுடன் சுகாதாரமான முறையுடன் கூடிய, தற்காலிக "சிலாட்டர் ஹவுஸ்" என்ற பெயரில் மைதானத்தின் பல இடங்களில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சங்க பரிவார விஷமிகள், நகராட்சி அதிகாரிகளையும் துணைக்கு அழைத்துக்கொண்டு ரவுடித்தனத்தில் ஈடுபட்டனர்.
என்றாலும், வழக்கமான இவர்களது "பாச்சா" இங்கு பலிக்கவில்லை.
அதையடுத்து, போலீஸ் படையுடன் வந்து சட்டம் பேசினர்.
சட்டப்படி, நகராட்சிக்கு சொந்தமான சிலாட்டர் ஹவுசில் தான், ஆடுகளை அறுக்கவேண்டும், என்பது போன்ற "உதவாக்கரை" வாதங்களில் ஈடுபட்டவர்களிடம் "சரிக்கு சரியாக" பதிலடி கொடுத்து "பண்டார பரதேசிகளை" விரட்டியடித்தனர், முஸ்லிம்கள்.

0 comments:

Post a Comment