Friday, October 5, 2012

மாலேகான் குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் மறுப்பு!

Malegaon blast- SC refuses interim bail to Shrikant Purohit, Pragya Thakur, others

புதுதில்லி : மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹிந்துத்துவா தீவிரவாதிகளான இராணுவத்தில் பணிபுரிந்த ஸ்ரீகாந்த் பிரசாத் புரோகித், பிரக்யா சிங் தாக்கூர் உட்பட அனைத்து ஃபாசிஸ்டுகளுக்கும் இடைக்கால பிணை வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த 4 வருடங்களாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் வாடுகிறார்கள் என்றும், அவர்களின் மனுவை இதுவரை நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்காக வாதாடும் மூத்த வழக்கறிஞர் யு.ஆர். லலித் கூறினார். இவரது வாதத்தை ஹெச்.எல். தத், சி.கே. பிரசாத் ஆகிய நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் ஏற்கவில்லை. அதனைத் தொடர்ந்து இந்தக் கட்டத்தில் இவர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் மனு மீதான வாதம் கேட்காதது தங்கள் குற்றமல்ல என்று விளக்கமளித்த நீதிமன்றம், மாநில அரசு இந்த வழக்கை நீட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததைச் சுட்டிக்காட்டியது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை மூன்று வாரங்களுக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது

0 comments:

Post a Comment