Tuesday, October 23, 2012

நடு ரோட்டில் பூசணிக்காய் உடைக்கலாம்; சிலைகளை கரைத்து நீர் நிலைகளை "மாசு" படுத்தலாம்; குர்பானி மட்டும் கூடாதா?


OCT 23, நடு ரோட்டில் பூசணிக்காயை உடைத்து போட்டு விபத்துக்கள் ஏற்படுத்தும் செயலுக்கும், ரசாயன பூச்சுக்களை கொண்ட விநாயகர் சிலைகளை கடல் மற்றும் நீர் நிலைகளில் கரைத்து மாசு ஏற்படுத்தும் செயலுக்கும்,
கட்டுப்பாடில்லாமல் பட்டாசுக்களை வெடித்து இதய நோயாளிகளுக்கும், "செவிப்புலன்"களுக்கும் பாதிப்பை உண்டாக்கலாம், ஆனால், மனிதர்கள் புசிக்க  இயற்கையின் வரமாக அமைந்துள்ள ஆடு மாடு போன்ற பிராணிகளை அறுத்து பலியிடும் "குர்பானி"க்குத்தான் எத்தனை தடைகள்? என்று தீரும் இந்த வேதனை?.
ஹிந்து சமூக மக்கள் "ஆயுத பூஜை" அன்று மட்டுமல்லாமல் ஒவ்வொரு "அமாவசை" தினத்தின் போதும், தனிப்பட்ட "திருஷ்டி" பரிகாரத்துக்கும்,  புதிய வாகனம், புதிய வீடு என பல நிகழ்ச்சிகளிலும் "பூசணிக்காய்" உடைப்பதும், அதுவும் ரோட்டில் வைத்து உடைப்பதும் வாடிக்கையான ஒரு விஷயம்.
அதை முறையாக  அப்புறப்படுத்துவதில் ஏற்படும் குறைபாடுகளால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவதும் எதார்த்தமாக எல்லோரும் அறிந்த ஒன்று.
அது போல, "விநாயகர்" சதுர்த்தியின் போது ஹிந்து சமூக மக்கள் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.
பக்தி அடிப்படையில் வழிபட "களிமண்ணால் செய்யப்படும் விநாயகர்" சிலைக்கரைப்புக்களால் பாதிப்புக்கள் இல்லை.
என்றாலும், மத ரீதியான வழிபாட்டில் அரசியலை கலக்கி, அப்பாவி ஹிந்து மக்களை வெறியேற்றி, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் "ஹிந்து முன்னணி"  பாஜக, போன்ற விஷமிகளால் செய்யப்படும் விநாயகர் சிலைகள் பெரும்பாலும் "பிளாஸ்டர் ஆப் பாரீஸ் பவுடரில்  கெமிக்கல் பூச்சுக்கள்" பூசப்பட்டு கடலில் உள்ள மீன் இனங்களுக்கு கடும் பாதிப்பை உண்டாக்கும் அளவிற்கு "மாசு" நிறைந்த சிலைகள் செய்யப்படுகின்றன.
அதற்கு, "பெயரளவில் சில கட்டுப்பாடுகள்" விதிக்கப்பட்டாலும், போலீஸ் துறை உள்ளிட்ட அனைத்து  அரசுத்துறையும் "அவாள்"களிடம் கை கட்டி நிற்பதை நாடறியும்.
தீபாவளி என்று மட்டுமல்லாமல் பல நிகழ்ச்ச்களுக்கும் வெடிக்கப்படும் பட்டாசுகளால், உயிரிழந்தவர்களும் காயம் பட்டவர்களும் கடந்த  பத்தாண்டுகளில் மட்டும் 1000க்கும் அதிகம் என்று அரசு சொல்கிறது.
இவைகள் எல்லாம் "மத வழிபாடு சுதந்திரம்" என சொல்லப்படுகிறது.
முஸ்லிம்களை பொறுத்தவரை வருடத்தில் 2 நாட்கள் மட்டுமே பண்டிகை நாட்கள்.
அதிலும், தொழுகை... தொழுகை... தொழுகை! அமைதி... அமைதி... அமைதி!
எந்த ஆர்ப்பாட்டமமுமில்லாமல், முஸ்லிம்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் விஷேசம் "பிரியாணி" மட்டும் தான்.
கறி விற்கும் விலையில், அதை விலை கொடுத்து வாங்கி சமைக்க முடியாத பல ஏழைகள் பயன்பெரும் வகயில், (குர்பானி) அறுத்து பலியிட்டு பங்கிடப்படும் இறைச்சிக்கான பிராணிகள் விஷயத்தில், ஏன் இந்த கொடுமை?
மிருக வதை என்று சொல்லிக்கொண்டு மனிதர்களை வதைப்பது எந்த வகை நியாயம்?

1 comment:

  1. அருமையான கட்டுரை.ஆர் எஸ் எஸ் இவர்களுக்கு எதாவது மூளை இருந்தால் யோசிக்கட்டும் இதை பற்றி.

    ReplyDelete