ஜித்தா : 1433ம் ஆண்டின் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற உலகம் முழுவதிலிருந்தும் ஹாஜிகள் மக்கா, மதீனாவை நோக்கி வந்து குவிந்து கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவிலிருந்து இவ்வாண்டு இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளவுள்ள யாத்திரிகர்களுக்கான விமானச் சேவை செப்டம்பர் 17 அன்று துவங்கியது. அக்டோபர் 16 வரை 392 விமானங்கள் மூலம் 114,600 யாத்திரிகர்கள் ஜித்தாவிலும், மதீனாவிலும் தரை இறங்கி உள்ளனர்.
அதே சமயம் மரணங்களும் நிகழ்கின்றன. ஹஜ் பயணம் மேற்கொண்டு சவூதி வந்த ஹாஜிகளில் 54 இந்தியர்கள் இதுவரை மரணமடைந்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து இவ்வாண்டு மொத்தம் 1,70,000 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர். அதில் சுமார் 45,000 பேர் தனியார் ஹஜ் நிறுவனங்கள் மூலம் பயணம் செய்கின்றனர்.
அந்த யாத்திரிகர்களின் பயணம் குறித்த பல தகவல்களை (மக்காவில் தங்கும் ஹோட்டல் விவரம், மதீனாவில் தங்கும் ஹோட்டல் விவரம், தொடர்பு தொலைபேசி எண் போன்ற) இணையதளம் மூலம் அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி ஜித்தாவில் உள்ள இந்திய தூதரக இணையதளத்தில் பராமரிக்கப்படுகிறது. இணையதள முகவரி: http://212.62.120.219/PTOsearch.aspx
0 comments:
Post a Comment