கர்நாடகா : பாப்புலர் ஃப்ரண்ட் ஏன் ? என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கர்நாடகா மாநிலம் குல்பர்காவின் தேசிய கல்லூரியில் 19.10.2012 அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
மாவட்ட தலைவர் ஷாஹித் நஸீர் வரவேற்புரை நிகழ்த்தினார்.மாநில துணை தலைவர் அப்துல் வாஹித் சேட் தலைமை உரை ஆற்றினார். அவர் தனது உரையில் " சிறுபான்மை மற்றும் ஏழை மக்களுக்கு பாப்புலர் ஃபிரண்ட் போராடி வருவதால் அது குறிவைக்கப்படுகிறது.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சிமியின் மறு வடிவம் என்று கூறுபவர்கள் ஒரு விஷயத்தை சிந்திக்க மறந்து விட்டார்கள்.2001ல் தடை செய்யப்பட்ட சிமியின் மறுவடிவாக 1993ல் உருவாக்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எவ்வாறு இருக்க முடியும்? "என்று குறிப்பிட்டார்.
அதனை தொடர்ந்து சமதா செய்நிக் தால் அமைப்பின் மாநில தலைவர் வெங்கடசாமி உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் " சில வகுப்புவாத சக்திகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தடை செய்ய முற்படுகின்றன.ஆனால் பெரும்பான்மை சமூகமாக திகழும் முஸ்லிம்களும் தலித்களும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பணிகள் தொடர வேண்டும் என்று விரும்புகின்றனர்.இத்தகைய பிரச்சாரங்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செவி சாய்க்க வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் " என்று குறிப்பிட்டார்.
பின்னர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் மௌலானா கலீமுல்லாஹ் சித்தீக்கி சிறப்புரையாற்றினார்;.அவர் தனது உரையில் " சாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து இந்தியா;களின் சம உரிமைகளுக்காகவும் முஸ்லிம்களை சக்திபடுத்துவதற்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராடி வருகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பணிகளையும் இதற்கு முன்னர் நடத்திய பிரச்சாரங்களையும் அவர் பட்டியலிட்டார்.சட்டவிரோத நடவடிக்கைகளில் இதுவரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஈடுபட்டது கிடையாது இனியும் ஈடுபடபோவதில்லை.நாம் சட்டத்தை மதிப்பவர்கள். சுதந்திர தின அணிவகுப்பிற்கு நீதிமன்றம் உத்தரவு மறுத்தவுடன் அதனை ஏற்று கொண்டோம்.இதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்து பல பொருட்செலவுகள் செய்த போதும் நாம் நீதிமன்ற உத்தரவை ஏற்றுகொண்டோம்.ஐஎஸ்ஐயுடன் கூட்டு சேர்ந்து சங்பரிவார் கும்பல் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்துவதாக " குற்றம்சாட்டினார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள், எஸ்டிபிஐ நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் என பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.
0 comments:
Post a Comment