Sunday, October 14, 2012

போலீசின் வெறிச்செயல் : "கொலை" செய்துவிட்டு "தற்கொலை" என கதை கட்டுவதாக தந்தை புகார்!


 ஆந்திர மாநிலம் நிஜாமாபாதை சேர்ந்த, அப்துல் ரசாக் (30) என்ற அப்பாவி இளைஞர் மீது "பொய் வழக்கு" போட்டு சிறையிலடைத்தும் திருப்தியடையாத போலீஸ், அவரை "கொலை" செய்துவிட்டு "தற்கொலை" என, கதை கட்டுவதாக அப்துல் ரசாக்கின் "தந்தை" அப்துல் சத்தார் தெரிவித்தார்.
கடந்த 2003ம் ஆண்டு தில்சக் நகர் "சாய்பாபா" கோவிலில் குண்டு வெடித்தது. எந்த தடையங்களும் கிடைக்காததால், இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் திணறிய ஆந்திர போலீஸ், 2005ம் ஆண்டு ஈரானிலிருந்து  இந்தியா திரும்பி வந்த அப்துல் ரசாக்கை அந்த வழக்கில் சேர்த்தது.  சம்பவம் நடந்தபோது இந்தியாவிலேயே  இல்லாத அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ், "பொடா" சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகள் (2005-2007) "சர்ல பள்ளி" ஜெயிலில் அடைத்தது. அப்போது, கொடும் சித்திரவதைக்கு ஆளான அப்துல் ரசாக், 2007ல் தண்டனை முடிந்து வெளியே வந்தார்.                                                                                                                                           ஜெயிலை விட்டு வெளியே வந்தபின்பும், போலீசின் தொல்லைகள் தொடர்ந்த வண்ணமிருந்தது. எங்கு வேலைக்கு சேர்ந்தாலும், கண்காணிக்கிறோம் என்ற பெயரால் நிழல் போல் தொடர்ந்த போலீசின் தொல்லைகளால்,  எங்கும் வேலை செய்ய முடியாத நிலையில், உறவினர்கள் உதவியுடன் சொந்தமாக "இன்டர்நெட் செண்டர்" வைத்து தொழில் செய்து வந்தார்,அப்துல் ரசாக்.  "சாய்பாபா" கோவில் வழக்கில், அப்துல் ரசாக் மீது எந்த குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாத போலீஸ், அவரை போலீசின் உளவாளியாக செயல்பட வலியுறுத்தியது. போலீஸ் இன்பார்மராக தன்னால் செயல் படமுடியாது என உறுதிபட கூறிவிட்ட நிலையிலும், போலீஸ் அவரை பின் தொடர்ந்துக்கொண்டே இருந்தது.                                                                                                                                                                   இறுதியாக, நேற்று முன்தினம் (10/10) புதன்கிழமை மாலை அப்துல் ரசாக் தங்கியிருந்த வீட்டிலேயே "தூக்கு போட்டு தற்கொலை" செய்துக்கொண்டதாக, ஹுமாயூன் நகர காவல் நிலையத்தில் வழக்கை (வாழ்க்கையை) முடித்து விட்டனர்.                                                 இதில் பலத்த சந்தேகம் உள்ளதாக, அப்துல் ரசாக்கின் தந்தை அப்துல் சத்தார் கூறுகிறார். முதலாவது, தற்கொலை குறித்து  தனக்கோ, தன் குடும்ப உறுப்பினர்களுக்கோ "போஸ்ட் மார்டம்" செய்யும் முன் போலீஸ் தகவல் கொடுக்கவில்லை. அப்துல் ரசாக் தங்கியிருந்த வீட்டு உரிமையாளரிடம், தனது தொலைபேசி எண், நிஜாமாபாத் கவுன்சிலராக உள்ள தனது மூத்த மகன் உள்ளிட்ட, தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பலரது தொலைபேசி எண்கள் உள்ள நிலையில், வீட்டு உரிமையாளரை மிரட்டி, தங்களுக்கு தகவல் வராமல் போலீஸ் பார்த்துக்கொண்டதாக குற்றம் சுமத்துகிறார்.                                                                                                                                                 அத்துடன், "இரவு 12 மணிக்கு மேல் அவசரம் அவசரமாக போஸ்ட் மார்டம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?" என்றும் கேள்வி எழுப்புகிறார்,மகனை இழந்த அப்துல் சத்தார். தகவலறிந்து "போஸ்ட்மார்டம்" செய்யப்படும் இடத்தை நோக்கி செல்ல முயன்ற தங்கள் குடும்பத்தினரை பயமுறுத்தும் வகையில், 150 போலீசார்  குவிக்கப்பட்டிருந்ததாக கூறுகிறார்.                                                               போலீஸ் தொடர்ந்து கடந்த 7 வருடங்களாக எனது மகனை  "சித்திரவதை"க்கு உள்ளாக்கிய போதும், தனது மகன் ஒருபோதும் "தற்கொலை" செய்துக்கொள்ளும் மன நிலைக்கு செல்லவில்லை, என உறுதி பட கூறும் பெரியவர் அப்துல் சத்தார், தனக்கு போலீசின் மீது அசைக்க முடியாத "சந்தேகம்" உள்ளதாக தெரிவித்தார்

0 comments:

Post a Comment