புதுடெல்லி:கல்வி கூடங்களில் இயக்க சுதந்திரம்(organisational freedom) கோரி மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பாராளுமன்றத்தை நோக்கி அணிவகுப்பை நடத்தியது.
மதியம் 2.30 மணியளவில் துருக்மான் கேட்டில் இருந்து அணிவகுப்பை துவக்கிய உறுப்பினர்களை போலீசார் ஜந்தர் மந்தரில் தடுத்தனர். அதனைத் தொடர்ந்து நடந்த கண்டனப் போராட்டத்தை தேசிய தலைவர் அனீசுஸ்ஸமான் துவக்கி வைத்தார்.
அவர் தனது உரையில், கல்வி கூடங்களில் மாணவர்களுக்கு இயக்க சுதந்திரத்தை மீண்டும் கொண்டுவர பாராளுமன்றத்தில் சட்டமியற்ற வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். கல்வி கூடங்களில் அரசியலை ஒழிப்பது க்ரிமினல் குழுக்கள் வளர்ச்சியடைய மட்டுமே உதவும். கல்வி கூடங்களில் அரசியல் மட்டுமல்ல சிந்தனை சுதந்திரம் கூட நஷ்டப்பட்டுவிட்டது என்றார் அனீசுஸ்ஸமான்.
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பொதுச்செயலாளர்களான சி.ஏ.ரவூஃப், ஆஸிஃப் மிர்ஸா, டெல்லி மாநில பொதுச்செயலாளர் காலித் கான், என்.சி.ஹெச்.ஆர்.ஓ உறுப்பினர் தன்வீர் ஆகியோர் உரையாற்றினர்
0 comments:
Post a Comment