23 Oct 2012
காஸ்ஸா:தடைகள் மூலம் துயருறும் காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திய அராஜக தாக்குதலில் 2 ஃபலஸ்தீன் மக்கள் பலியாகியுள்ளனர். ஏராளமானோருக்கு காயமேற்பட்டது.
கத்தர் நாட்டின் அமீர் ஹமத் பின் கலீஃபா அல் தானி காஸ்ஸாவுக்கு செல்வதற்கு சற்று முன்னர் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. 2007-ஆம் ஆண்டு ஹமாஸ் இயக்கம் காஸ்ஸாவில் ஆட்சியை பிடித்த பிறகு செல்லும் முதல் அரபு நாட்டு ஆட்சியாளர் ஹமத் பின் கலீஃபா அல் தானி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
காஸ்ஸாவில் இருந்து நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. காஸ்ஸாவின் நிலைமைகளை சீர்குலைப்பதே எப்பொழுதும் யூத நாட்டின் முயற்சி என்று ஹமாஸின் ராணுவப் பிரிவான இஸ்ஸத்தின் அல் கஸ்ஸாம் குற்றம் சாட்டியுள்ளது
0 comments:
Post a Comment