Monday, October 1, 2012

அநியாயமாக கொடுமைக்கு ஆளாகும் ஃபஸீஹ் – நிகாத் பர்வீன்!

My husband being harassed unnecessarily- Fasih's wife Nikhat Parveen

புதுடெல்லி:தீவிரவாத குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்ட பீகாரைச் சார்ந்த இளம் முஸ்லிம் பொறியாளர் ஃபஸீஹ் மஹ்மூதை இந்தியாவிடம் ஒப்படைக்க கூடுதல் ஆதாரங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்ட சவூதி அரேபியாவின் நடவடிக்கை நம்பிக்கை அளிப்பதாக அவரது மனைவி நிகாத் பர்வீன் கூறியுள்ளார்.
கடந்த மே மாதம் சவூதி அரேபியாவின் ஜுபைலில் வைத்து இந்திய-சவூதி அரேபியா பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஃபஸீஹை குறித்து எந்த விபரமும் இல்லை என்று கூறி அவரது மனைவி நிகாத் பர்வீன் உச்சநீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவை தாக்கல் செய்தார். ஆனால், முறையான பதிலை மத்திய அரசு அளிக்கவில்லை.
இந்நிலையில் சவூதி அரேபியா அரசு அதிகாரிகள் வசம் ஃபஸீஹ் உள்ளதாகவும், கூடுதல் ஆதாரங்களை இந்தியா அளித்தால் அவரை ஒப்படைப்பதாக சவூதி அரேபியா கூறியது என்று செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் ஃபஸீஹின்  மனைவி இதுக்குறித்து கூறுகையில்,
சவூதியின் அறிவிப்பு தனது கணவர் மீது எவ்வித குற்றமும் இல்லை என்பதை நிரூபிக்கிறது என்று அவர் தெரிவித்தார். செய்தி நிறுவனம் ஒன்றிற்கு தொலைபேசி மூலம் நிகாத் பர்வீன் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஃபஸீஹை இந்தியாவிடம் ஒப்படைக்க சவூதி அரேபியா அரசு கூடுதல் ஆதாரங்களை இந்தியாவிடம் கேட்டுள்ள செய்தியை பத்திரிகைகள் மூலமாகவே அறிந்தேன். இதில் இருந்து ஃபஸீஹிற்கு எதிராக இந்திய புலனாய்வு அதிகாரிகளால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது நிரூபணமாகிறது என்று நிகார்த் பர்வீன் கூறினார்.
சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த நிரபராதிகள் தீவிரவாதிகளாக முத்திரைக் குத்தப்படவில்லை என்பதை புலனாய்வு ஏஜன்சிகள் உறுதிச் செய்யவேண்டும் என்று நேற்று முன்தினம் உச்சநீதிமன்றம் கூறியதை சுட்டிக்காடிய பர்வீன் தனது கணவர் தொடர்பான வழக்கில் மத்திய அரசு தனியாக கவனம் செலுத்தவேண்டும். உளவுத்துறை ஏஜன்சிகளின் செயல்பாட்டை மத்திய அரசு ஏன் கவனமாக கண்காணிப்பதில்லை? நான்கு மாதங்கள் கழிந்த பிறகு ஃபஸீஹ் மஹ்மூதிற்கு எதிராக ஆதாரங்களை அளிக்க அதிகாரிகளால் இயலவில்லை. இதன் மூலம் தனது கணவர் நிரபராதி என்பது நிருபாணமாவதாக நிகாத் பர்வீன் தெரிவித்தார்.
 3 0 0 3

0 comments:

Post a Comment