எதிர்வரும் தியாக திருநாளை முன்னிட்டு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் அதிரையில் மின் தடை செய்யக்கூடாது என அதிரை நகர பாப்புலர் ப்ரண்ட் சார்பில் நேற்று நமதூர் மின்சாரவாரிய அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது.
தமிழகத்தில் தொடர் மின்வெட்டு இருந்து வந்தாலும் பண்டிகை காலங்களில் ஒரு நாள் மட்டும் தடையில்லா மின்சாரம் வழங்குவது வழக்கம். சமீபத்தில் நடந்த ஆயுத பூஜை அன்று கூட தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. அதிகரித்துள்ள மின்பற்றாக்குறையை காரணம் காட்டி வரும் ஹஜ் பெருநாள் அன்று மின் சப்ளையை நிறுத்த உள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து, நமதூர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிருவாகிகள் அதிரை மின்சார வாரிய் அதிகாரிகளை நேரில் சந்தித்து வெள்ளிக்கிழமை ஜும்'ஆ நேரத்திலும் ஹஜ் பெருநாளன்றும் மின் நிறுத்தம் செய்யக்கூடாது என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.
கடந்த வருடங்களில் பெருநாள் அன்று அதிரையில் மின்சாரம் தடை செய்யப்பட்டதும் தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை போன்ற பண்டிகை நாட்களில் மின் தடை செய்யப்படாதததும் குறிப்பிடதக்கது.
0 comments:
Post a Comment