Friday, October 12, 2012

"ஜம்ஜம்" தண்ணீரில் கலப்படமா? : அடிப்படை ஆதாரமற்ற வதந்தி! -சுதைஸ்!

OCT 11, புனித மக்காவில் கிடைத்து வரும் "ஜம்ஜம்" தண்ணீரில் கலப்படம் செய்யப்படுவதாக வரும் வதந்திகள், முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது, என மக்கா பள்ளிவாசலின் நிர்வாக கமிட்டியின் "டைரக்டர் ஜெனரல்" டாக்டர் அப்துர்ரஹ்மான் சுதைஸ் கூறியுள்ளார்.
ஜம்ஜம் கிணறு வற்றி வருவதாகவும், தற்போது "ஜம்ஜம்" தண்ணீரில் வேறு குடிநீர் கலக்கப்படுவதாகவும் நினைப்பது, அல்லாஹ்வின் வல்லமையை சந்தேகிப்பதாகும். புனித "ஜம்ஜம்" கிணற்றில் வறட்சி அல்லது பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை.                                                                                                                                                                                                                                                                                                       ஜம் ஜம் தண்ணீர், அதன் இயற்கை தன்மையோடு கிடைத்து வருகிறது. மேலும், அதை முழுமையாக பாதுகாத்திடும் வேலைகளை சவூதி அரசு முழுமூச்சுடன் செய்து வருகிறது. மேலும், ஜம்ஜம் கிணற்றை சுற்றியுள்ள எந்த இடத்திலும் தண்ணீர் கிடைப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்பதை "பூமிக்கடியில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வின் மூலம்" உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்,சுதைஸ்.                                                                                                                                                                                                                                                       எனவே "ஜம்ஜம்" நீரில் வேறு வகையான குடிநீர் கலப்படம் என்ற எந்த செய்திகளையும் பொருட்படுத்தாமல், வழக்கம்போல் இந்த நீரை அதன் சிறப்புக்கள் மற்றும் கண்ணியத்தை மனதில் கொண்டு, தாரளாமாக பயன் படுத்திக்கொள்ள ஆர்வப்படுத்தி பேசிய அவர், ஜம்ஜம் "நோய் நீக்கும் நிவாரணி" என்ற நபி மொழியையும் இன்ன பிற சிறப்புக்களையும் நினைவு படுத்தினார். ஜம்ஜம் தண்ணீர் என்பது, அல்லாஹ்வின் அத்தாட்சிக்களில் ஒன்றாகும், இதில் சந்தேகம் கொள்வது பெரும் துரதிஷ்டமாகும் என்றார், சுதைஸ்.

0 comments:

Post a Comment