Monday, October 1, 2012

ஆஃப்கான்:10 ஆண்டுகளில் 2000 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி!

US military deaths in Afghanistan hit 2000

காபூல்:ஆஃப்கானிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்தினருக்கும், தாலிபான் போராளிகளுக்கும் இடையேயான போரில் இதுவரை 2 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் பாலியாகியுள்ளதாக அமெரிக்க அதிகாரி கூறுகிறார்.
அண்மையில் ஆஃப்கான் பாதுகாப்பு படை வீரரால் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தாக்குதல் ஒன்றில் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரும், சிவிலியன் காண்ட்ராக்டர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
2012ஆம் ஆண்டில் மட்டுமே ஆஃப்கானிய பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஐம்பதுக்கும் அதிகமான அந்நிய ஆக்கிரமிப்பு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆஃப்கான் பாதுகாப்பு படையினரிடமிருந்து ஆபத்துக்கள் அதிகரிப்பதை தொடர்ந்து நேட்டோ படை அவர்களுடன் ரோந்து பணியில் ஈடுபடுவதை பயந்துபோய் நிறுத்தியுள்ளது

0 comments:

Post a Comment