Saturday, October 13, 2012

புனித மக்காவில் அதிரை ஹாஜிகள் (ஹஜ் 2012)


இந்த வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற உலகெங்கிலிருந்தும் முஸ்லிம்கள் புனித மக்காவை நோக்கி வந்தபடி உள்ளனர். அந்த வகையில் அதிரையிலிருந்தும் தனியார் ட்ராவல் நிறுவனம் மற்றும் ஹஜ் கமிட்டி மூலம் பல பிரிவுகளாக ஹாஜிகள் வந்துகொண்டு இருக்கின்றனர்.

ஹாஜிகள் அனைவரும் புனித மக்காவில் அவர்களின் ஹஜ்ஜின் ஆரம்ப கடமைகளை நிறைவேற்றி  அவரவர்களுக்கு கொடுக்கப் பட்டுள்ள இருப்பிடங்களில் தங்கியிருந்து இபாதத்துகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நமதூரிலிருந்து ஹஜ் கமிட்டி மூலம் வந்துள்ள பெரும்பாலான ஹாஜிகள் ஹரம் ஷரீஃபிலிருந்து சிறு தொலைவில் உள்ள அஜீஸிய்யா பகுதியில் தங்க வைக்கப் பட்டிருப்பதால் அடிக்கடிஹரம் ஷரீஃப் வந்து செல்வதில் சிரமம் இருப்பதை மறுப்பதற்கில்லை. எனினும் அனைவரும் உடல் நலத்துடன் இருக்கின்றனர். இனியும் ஹாஜிகள் அனைவரும் ஆரோக்கியத்துடன் இப்புனித கடமையை நிறைவேற்ற வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.

இந்நிலையில் இன்னும் சில ஹாஜிகள் இந்த வார இறுதிக்குள் வந்து சேர்வார்கள் என எதிர் பார்க்கப் படுகிறது.

இவ்வருடம் யார் யாரெல்லாம் விண்ணப்பித்து வாய்ப்பு கிடைக்காமல் உள்ளனரோ, அதேபோல இப்புனித தளத்தை தரிசிக்க யார் யாரெல்லாம் ஆசை வைத்துள்ளனரோ, இவர்கள் அனைவரும் எதிர் வரும் காலங்களில் முழு உடல் ஆரோக்கியத்துடனும்.வசதி வாய்ப்புடனும் வாழ்வில் ஒரு முறையேனும் இந்த புனிதக் கடமையை நிறைவேற்ற வல்லோனிடம் பிரார்த்திப்போம்.

குறிப்பு: ஹஜ்ஜுக்கு வந்துள்ள உறவினர்கள், நண்பர்களுக்கு  தேவையான உதவிகளை மேற்கொளவது சவுதி வாழ் India Fraternity  Forum சகோதரர்களின் வழக்கம், இந்நிலையில் கடந்த சில வருடங்களாக ஹஜ் செய்ய உரிமம், அல்லது மக்கா செல்ல அனுமதி பத்திரம் இல்லாத சவூதி வாழ் சகோதர்கள் மக்கா எல்லைக்குள் நுழைய ஹஜ் காலங்களில் அனுமதி மறுக்கப் பட்டு வருகிறது ,

இது  இவ்வருடமும் அமுலில் உள்ளதாலும் மக்கா எல்லையில் கெடுபிடி அதிகமாக இருப்பதாலும், சவுதி வாழ் ச்கோதரர்கள் ஹஜ் காலங்களில் மக்கா செல்ல  உரிய உரிமத்துடன் செல்வது சாலச்சிறந்தது.

ஏனென்றால் இதனால் பிற்பாடு சில சட்டசிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப் படுகிறது
India Fraternity  Forum CONTACT: 00966596577899 

0 comments:

Post a Comment