4 Oct 2012
துபாய்: உலக ஆரோக்கிய இதய தினத்தை முன்னிட்டு அமீரகத்தில் பல சமூக சேவைகளைச் செய்து வரும் எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரெட்டர்னிட்டி ஃபோரம் (Emirates India Fraternity Forum – EIFF) துபாயில் “ஆரோக்கியமான இதயம்” என்ற தலைப்பில் பிரச்சாரக் கூட்டம் ஒன்றை நடத்தியது.
கேரளா மருத்துவப் பட்டதாரிகள் அமைப்பின் (Kerala Medical Graduates Association) துபாய் கிளையுடன் இணைந்து EIFF இந்த நிகழ்ச்சியை நடத்தியது. இதில் மெட் ஹெல்த் மெடிக்கல் சென்டரின் இயக்குனர் டாக்டர் ஜெயஷங்கர் உரையாற்றினார். துபாயிலுள்ள தேரா ஃப்ளோரா ஹோட்டலில் வைத்து நடைபெற்ற இந்நிகழ்ச்சியை அஜ்மான் இண்டர்நேஷனல் இந்தியன் பள்ளியின் முதல்வர் அப்துல் மஜீத் துவக்கி வைத்தார்
0 comments:
Post a Comment