சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் சுல்தான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் இன்று அதிகாலை நியுயார்க்கில் மரணமடைந்தார். சவூதி அரசில் முதலாம் துணைப் பிரதமராகவும் பாதுகாப்புத் துறை, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் விளங்கிய அவருக்கு வயது 81. நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த இளவரசர் சுல்தான் அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டிருந்தார். தனது கொடைத் தன்மையால் சிறப்புற்றிருந்த இளவரசர் சுல்தான், தாயார் வழியில் சுதைரி குடும்பத்தைச் சேர்ந்தவர்.
சுதைரி செவன் என்று அழைக்கப்பட்ட மற்ற அரச குடும்ப சகோதரர்கள் :
- மன்னர் ஃபஹத் பின் அப்துல் அஸீஸ் (1921-2005), சவூதி அரேபியாவின் ஐந்தாவது மன்னர்.
- இளவரசர் அப்துல் ரஹ்மான் (பிறப்பு 1931), பாதுகாப்புத் துறை துணை அமைச்சர்
- இளவரசர் நாயிஃப் (பிறப்பு 1933), 1975 லிருந்து உள்துறை அமைச்சர். 2009 -லிருந்து இரண்டாம் துணைப் பிரதமர்.
- இளவரசர் துர்க்கி (பிறப்பு 1934)
- இளவரசர் சல்மான் (பிறப்பு 1936), ரியாத் மாகாண ஆளுநர்
- இளவரசர் அஹமது
0 comments:
Post a Comment