லெபனானின் மீது மூன்றாவது தடவையாகப் பேர்தொடுக்க ஸியோனிச அரசு திட்டமிட்டுள்ளதாக லெபனானின் உள்நாட்டு செய்தித்தாபனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலானது தனது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ளும் நோக்கிலேயே லெபனான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், யெமன்,சிரியா,லிபியா,ஜோர்தான், பஹ்ரைன், சவூதிஅரேபியா போன்ற நாடுகளில் ஆட்சிககு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி
இஸ்ரேல் லெபனான் மீது போர்த் தொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் லெபனானின் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் கடந்த 2000,2006ஆம் ஆண்டுகளில் லெபனான் மீது போர்த் தொடுத்தது.இதனால் 1200 இற்கும் அதிமான லெபனான் மக்கள் கொல்லப்பட்டனர். 2006ஆம் ஆண்டில் 33நாட்களாக நடைபெற்ற போரில் அதிகமான லெபனானியமக்கள் கொல்லப்பட்டனர்.இரு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட போரின் போதும்ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலிய இராணுவத்தைத் தோற்கடித்து லெபனானின் எல்லையவிட்டு இஸ்ரேலிய இராணுவத்தைப் பின்வாங்கச் செய்தது.இதேவேளை
இஸ்ரேல் லெபனானின் மீது எந்ரேத்திலும் தாக்குதல் நடத்தத்தயாராக
இருப்பதாகவும்,இதனால் தாம் இஸ்ரேலின் தாக்குதலை எதிர்ப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது .
0 comments:
Post a Comment