Saturday, October 22, 2011

இன்று காலை நீதிமன்றத்தில் 2ஜி ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள 17 பேர் மீது சிபிஐ குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

புதுதில்லி, அக்.22: இன்று காலை நீதிமன்றத்தில் 2ஜி ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள 17 பேர் மீது சிபிஐ குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. இதில், கனிமொழி மற்றும் ராஜா உள்ளிட்டோர் மீது, இந்திய குற்றவியல் சட்டம் 409ன் கீழ் நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பிரிவு 409ன் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஆயுள்தண்டனை வரை தண்டனை கொடுக்கப்படலாம்.
ஆ.ராசா, கனிமொழி எம்.பி., மட்டுமல்லாது, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார் ராசாவின் உதவியாளர் சந்தோலியா, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ஸ்வான் டெலிகாம் உரிமையாளர் ஷாகித் பல்வா, இயக்குனர் வினோத் கோயங்கா. யுனிடெக் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் தொலைத் தொடர்பு பிரிவு அதிகாரிகள் கவுதம் ஜோஷி, ஹரி நாயர், சுரேந்திரா பிபாரா, கரீம் மொரானி உள்பட 17 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவர்கள் மீது ஊழல், ஏமாற்றியது, உயர்பதவியை தவறாக பயன்படுத்தியது, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட குற்றப் பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, அடுத்த கட்டத்துக்குகான உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இது தொடர்பான விவாதம் கடந்த 4 மாதங்களாக நடைபெற்றது. இது குறித்து இன்று நீதிபதி ஓ.பி.,சைனி உத்தரவு பிறப்பிக்கவுள்ளார். இதன் பின்னரே குற்றம் சாட்டப்பட்டோர் மற்றும் சி.பி.ஐ., தரப்பு வாதங்கள் துவங்கும்.
இந்நிலையில், கருணாநிதி தன் மகள் கனிமொழி உள்ளிட்டோரை சந்திப்பதற்காக தில்லி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment