Wednesday, October 19, 2011

ஈரானுக்கு எதிரான குற்றச்சாட்டின் பின்னணியில் மொசாத் மற்றும் சி.ஐ.ஏ

டெஹ்ரான்:சவுதி தூதரை கொலைச் செய்ய ஈரான் சதி செய்ததாக கூறப்படும் அமெரிக்க குற்றசாட்டின் பின்னணியில் மொசாத் மற்றும் சி.ஐ.ஏ செயல்பட்டு வருவதாக பிரபல அரசியல் ஆய்வாளர் பிரஸ் தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாயன்று பிரஸ் தொலைகாட்சிக்கு பேட்டியளித்த இஸ்மாயில் சலாமி இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொசாதும் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ வும் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் அமெரிக்காவின் நீதித்துறை அமெரிக்காவிற்கான சவுதி தூதரை கொலைச் செய்ய மெக்ஸிகோவின் போதை மருந்து கடத்தும் கும்பலை வைத்து சதி செய்ததாக ஈரான் மீது குற்றம் சாட்டியது.
ஈரான் அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இதைத் தொடர்ந்து சலாமி ஈரான் போன்ற இஸ்லாமிய அரசுகளை குலைக்க இஸ்ரேலின் மொசாத், அமெரிக்காவின் சி.ஐ.ஏ மற்றும் எம்16 ஆகிய உளவு அமைப்புகள் பல வருடங்களாக முயன்று வருகிறது என்றும் அதன் அடிப்படையில் தற்போது ஒரு திட்டத்தை அவை வகுத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சவுதி தூதரை கொலைச்செய்ய திட்டமிட்ட நபர் மொசாத்திடம் இருந்து பொய்யான தகவல்களை பெற்றுள்ளார் என்று பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ யின் உயர் பதவி வகிக்கும் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவின் முதலாளித்துவ கொள்கைக்கு எதிராக மக்கள் திரண்டுள்ளதை தடுக்க இயலாத அமெரிக்க அரசு இப்பிரச்சனை குறித்து சர்வதேச சமூகத்தின் பார்வை தம்மீது விழாதபடி திருப்பிவிடுவதற்காக அமெரிக்கா கையாளும் தந்திரம் என்றும் அவர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment