இஸ்லாமாபாத், அக்.9 - அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் குடும்பத்தினருக்கு விதிக்கப்பட்டிருந்த பயண கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக விசாரணை கமிஷன் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அபோட்டாபாத்தில் பதுங்கியிருந்த அல்கொய்தா இயக்க தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த மே மாதம் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஜாவிது இக்பால் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இதையடுத்து பின்லேடனின் குடும்பத்தார் பாகிஸ்தானை விட்டு வெளியேற தடை விதித்திருந்தது.
பின்லேடனின் மனைவிகள் குழந்தைகளிடம் கமிஷன் விசாரணை நடத்தி அவர்களது சாட்சியங்களை பதிவு செய்துள்ளது. அவர்களின் ஒத்துழைப்பு விசாரணை கமிஷனுக்கு இனி தேவையில்லை என தெரிகிறது. இதையடுத்து பின்லேடனின் குடும்பத்தாருடன் விசாரணை நிறைவடைந்து விட்டதால் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பயண கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்படுவதாக விசாரணை கமிஷன்தலைவர் தெரிவித்தார். பின்லேடன் கொல்லப்பட்டதில் இருந்து அவரது குடும்பத்தார் பாகிஸ்தான் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளனர். இவர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment