Tuesday, October 11, 2011

சமூக நீதி மாநாடு ஒரு மைல்கல்லாக மாறும்:பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான்.


sjf officeபுதுடெல்லி:அடுத்த மாதம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறவிருக்கும் சமூகநீதி மாநாடு சிறுபான்மை, பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக நீதிக்கான போராட்டத்தில் ஒரு மைல்கல்லாக மாறும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தெரிவித்துள்ளார்.

                                                   
சிட்டி ப்ளாஸாவில் சமூக நீதி மாநாட்டிற்கான அலுவலகம் திறப்பு நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தினார் அவர். முஸ்லிம் முத்தஹிதா மாஸ் சேர்மன் மெளலானா நவாபுத்தீன் நக்‌ஷபந்தி அலுவலகத்தை திறந்து வைத்தார். மாநாட்டின் அறிக்கையை சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டார்.


தென்னிந்தியாவிற்கு வெளியே பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் மிகப்பெரிய மாநாடாக சமூக நீதி மாநாடு அமையும் என இ.எம்.அப்துற்றஹ்மான் தெரிவித்தார். ஏதேனும் ஒரு பிரிவினர் தங்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக முயன்றால் அவர்களை தேச விரோதிகளாகவும், வளர்ச்சியின் எதிரிகளாகவும் முத்திரை குத்தி எதிர்க்கின்றனர்.

இந்தியாவில் நடந்த மேலும் 12 குண்டுவெடிப்புகளிலும் சங்க்பரிவாரத்தின் பங்கிருப்பதாக இப்பொழுது ஒப்புக்கொள்கின்றனர். 1992-ஆம் ஆண்டிற்கு பிறகு நடந்த அனைத்து குண்டுவெடிப்புகளை குறித்தும் அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என இ.எம்.அப்துற்றஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் இ.அபூபக்கர், அம்பேத்கர் சமாஜ் கட்சி தலைவர் பாய் தேஜ்சிங், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் துணைத்தலைவர் மெளலானா சுல்ஃபிக்கர் அலி, பாப்புலர் ஃப்ரண்ட் துணைத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா ஆகியோர் உரைநிகழ்த்தினர்.

thanks

0 comments:

Post a Comment