Monday, October 10, 2011

பா ஜ க: திட்ட வரைபடத்தில் மீண்டும் அயோத்தி ராமர் கோயில் !

உ.பி. உள்ளிட்ட வட மாநில தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, தனது இந்துத்துவா பிம்பத்தையும் அயோத்தி ராமர் கோயில் விவ'கார'த்தையும் மீண்டும் கையிலெடுக்க பாரதீய ஜனதா கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

மூத்த தலைவர்கள் கல்ராஜ் மிஸ்ரா, ராஜ்நாத்சிங் ஆகியோர் வியாழனன்று தொடங்க உள்ள 'ஜன ஸ்வாபிமான் யாத்ரா'க்களில், பேசு பொருள்களாக ஊழல், விலைவாசி, இவற்றுடன் அயோத்'தீ' யும் இடம் பிடிக்கும் என்று தெரிகிறது.

இவ்விரு யாத்ராக்களும் 'உ.பி பரிசோதனை' என்ற அளவில் மேற்கொள்ளப்பட்டாலும், லக்னௌ வில் சென்று முடிவடையும் முந்தைய முடிவுக்கு மாற்றமாக அயோத்தில் நவ.16 தேதி சென்று சேரும் விதமாக யாத்திரைத் திட்டம் திருத்தப்பட்டுள்ளது.  இதன் மூலம் 'அயோத்'தீ'யை கை விட்டு விடவில்லை என்பதை இந்த வலதுசாரி கட்சி புலப்படுதுகிறதாம். 
எனினும், எல்.கே.அத்வானியின் 'ரத' யாத்திரையில், அயோத்தி கவனமாகத் தவிர்க்கப்பட்டுள்ளதாம்.

அத்வானியால் கொடி அசைத்து தொடங்கிவைக்கப்படும் கல்ராஜ் மிஸ்ராவின் யாத்திரை வாரணாசியிலிருந்து தொடங்கினாலும், 'வழக்க'மான காசி விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து புறப்படாமல், பாரதமாதா கோயிலிலிருந்து புறப்படும் என்றும், அதுபோன்றே, அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் தொடங்கி வைக்க,  மதுரா விலிருந்து புறப்படும் ராஜ்நாத்சிங் 'கிருஷ்ணஜென்ம பூமி' என்று சர்ச்சைக்குள்ளாக்கப்படும் இடத்தை தவிர்ப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. 

தங்கள் நோக்கத்திற்காக மக்களை தயார்படுத்துவதே இந்த ரத யாத்திரைகளின் திட்டம் என்று பா ஜ க பிரமுகர் ஒருவர்  தெரிவித்தார்.
thanks to inneram

0 comments:

Post a Comment