குஜராத்தின் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கத்தில் சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவாக தீர்மானம் அஹ்மதாபாத்:குஜராத்தின் ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கம் இன்று மோடிக்கு எதிராக பிரமாண பத்திரம் தாக்கல் செய்த சஞ்சீவ் பாட்டின் கைதுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட் கடந்த பிப்ரவரி 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்திற்கு முன் நரமோடியால் குஜராத் உயர் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட சந்திப்பில் முஸ்லிம்கள் கலவரத்தில் கொலைச் செய்யப்படும்போது கலவரத்தை தடுக்க முயலக்கூடாது என்று கூறினார் என்று நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார். அதில் தனது உதவியாளரையும் கையெழுத்திட வைத்திருந்தார். தற்போது சஞ்சீவ் பாட்டின் உதவியாளர் பட் தன்னை வற்புறுத்தி கையெழுத்திட வைத்தார் என்று குற்றம் சாட்டியுள்ளதால் சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தின் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்க கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் கூறியதாவது; அதுல் கர்வால், வி.எம்.பர்கி உட்பட மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் சஞ்சீவ் பட்டின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தாரிடம் தீர்மானம் நிறைவேற்றியது குறித்து தவகல் தெரிவித்தாக கூறினர். மேலும் பட்டின் மனைவி ஸ்வேதா இதுபற்றி தெரிவிக்கையில்; ‘மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் எங்களிடம் சஞ்சீவ் பட்டின் உண்மைக்கு ஆதரவான போராட்டத்தில் நாங்கள் எப்போதும் உடன் இருப்போம்’ என்று கூறியதாக தெரிவித்துள்ளார். இதனிடையே சஞ்சீவ் பட்டின் ஜாமீன் மனு நாளை திங்கள் கிழமையன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment