
பாதுகாப்பைக் காரணம் காட்டி ஜெயலலிதா நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப் பட்டது. உச்சநீதிமன்றம் அக்டோபர் 20 அன்று ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் பாதுகாப்பு குறித்த அறிக்கை கர்நாடக அரசிடம் இருந்து தங்களுக்கு வரவில்லை என்றும் அதன் காரணமாக இரு வாரங்கள் ஜெயலலிதா நேரில் ஆஜராவதை ஒத்தி வைக்க வேண்டுமென ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜெயலலிதா நேரில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என மீண்டும் உத்தரவிட்டது.
வேறு வழியே இல்லாத நிலையில் ஜெயலலிதா இன்று காலை சசிகலா மற்றும் இளவரசியுடன் பெங்களூரு சென்று சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ள ஜெயலலிதா மற்றும் 4 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
0 comments:
Post a Comment