July 27,அபுதாபி: தன் பெயரை எதிலாவது எழுத வேண்டும் என்ற ஆசை பலருக்கு உண்டு. மரத்தில், பஸ் சீட்டில், மலை உச்சியில்.. இப்படி பொறித்து வைப்பார்கள்.
ஐக்கிய அரபு குடியரசின் அபுதாபி மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர். உலக கோடீஸ்வரர்களில் ஒருவர். உலகில் அதிகம் கார் வைத்திருப்போர் லிஸ்ட்டில் முன்னணியில் இருப்பவர். வகைக்கு ஒன்றாக 200 கார், டிரக் வைத்திருக்கிறார்.
அபுதாபிக்கு அருகில் உள்ள ஃபுடாய்சி என்ற தீவை இவரது தந்தை இவருக்கு பரிசாக கொடுத்தார். அதில் தனது பெயரை ரத்தின சுருக்கமாக ‘ஹமத்’ என்று முக்கால் கி.மீ. உயரம், 3 கி.மீ. நீளத்துக்கு எழுதி வைத்திருக்கிறார். இந்த எழுத்துகள் அனைத்தும் பிரமாண்ட பள்ளம் வெட்டியதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. கடற்கரையில் இருந்து பிரமாண்ட பள்ளம் வெட்டி அதில் கடல் நீரை வரவழைத்துள்ளார். செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்படும் போட்டோக்களில்கூட அவரது பெயர் தெரிகிறது. இதற்காக அவர் ரூ.99 ஆயிரம் கோடி செலவு செய்திருக்கிறார்.
சிந்திக்கவும்: ஒரு பக்கம் மக்கள் பசியால், பட்டினியால் சாவுகிறார்கள் இதை போன்ற செல்வந்தர்கள் பணத்தை இப்படி செலவு செய்கிறார்கள். இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் வீடுதான் உலகிலேயே அதிக பொருள் செலவில் கட்டப்பட்டது என்பது குறிப்பிட தக்கது. இப்படி பட்ட சுயநலம் கொண்டவர்களின் செல்வங்களை பறித்து ஏழை மக்களுக்கு கொடுக்க வேண்டும்.
0 comments:
Post a Comment