Wednesday, October 12, 2011

மனித உரிமை ஆர்வலர் கவிதா ஸ்ரீவஸ்தவாவின் வீட்டில் ரெய்டு: எஸ்.டி.பி.ஐ கண்டனம்


மனித உரிமை இயக்கமான பி.யு.சி.எல்லின் தேசிய செயலாளர் கவிதா ஸ்ரீவஸ்தவாவின் ஜெய்ப்பூர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கு சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.



இதுக்குறித்து எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முஸ்லிம் சிறுபான்மையினர்களுக்கும், ஏழைகளுக்கும் எதிரான ராஜஸ்தான் அரசின் நடவடிக்கைகளை வெளிக்கொணர்ந்த கவிதா ஸ்ரீவஸ்தவாவின் மீது பழிவாங்கும் நோக்கில் ரெய்ட் நடத்தி அவமானப்படுத்தியுள்ளனர். சோதனையிடும் வாரண்டை வெளியிடுவதை முக்கியமாக கருதவேண்டும். சோதனை வாரண்டை கோரும் மனுவை பரிசீலிக்காமல் இயந்திரத்தனமாக உத்தரவிடக்கூடாது என உச்சநீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருக்க எவ்வித நிபந்தனைகளையும் பேணாமல் வெளியிடப்பட்ட சோதனை வாரண்ட் குறித்து அஞ்சவேண்டியுள்ளது.


மனித உரிமை ஆர்வலரான பெண்மணியை மெளனியாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் அவரது வீட்டை சோதனை இட்டது. சட்டீஷ்கர் அரசின் மனித உரிமை மீறல்களையும், ராஜஸ்தான் அரசின் முஸ்லிம் சிறுபான்மை வேட்டையையும் தொலைவிலிருந்து எதிர்த்ததன் பேரில் கவிதா ஸ்ரீவஸ்தவாவை வேட்டையாடுகின்றனர். இவ்வாறு இ.அபூபக்கர் தெரிவித்துள்ளார்

0 comments:

Post a Comment