எந்தவொரு மதத்தினாலும் ஏற்படுத்த முடியாத தாக்கத்தை உலக வரலாற்றில் ஏற்படுத்திய பெருமை இஸ்லாத்திற்கு மாத்திரமே உண்டு.
கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கில் இஸ்லாத்தில் நுழைந்த மேற்கத்தைய மக்கள் தற்போது லட்சத்தில் நுழைந்து கொண்டிருக்கிறார்கள்.
கிருத்தவர்களின் தலைமை பீடமான வத்திக்கானிலிருந்து வெளிவரும் லோசேர் வேடோர் ரோம்மானோ ( LOSSERVATOR ROMMANO ) என்ற பிரபல பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஒரு கருத்துக் கணிப்பில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கமாக இஸ்லாமே திகழ்கிறது என்றும், உலக சனத்தொகையில் 4ல் ஒருவா் முஸ்லிமாக வாழ்வதோடு, விகிதாசாரத்தின் அடிப்படையில் 28 சதவீதம் முஸ்லீம்களும் 24 சதவீதம் கத்தோலிக்கர்களும் காணப்படுவதுடன் மொத்த மக்கள் தொகையில் 130 கோடிப் பேர் முஸ்லீம்கள் என்றும் 112 கோடிப் பேர்தான் கிருத்தவா்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளில் 1200 புதிய பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ளன. ஆண்டுக்கு, 100 புதிய பள்ளிகள் ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்படுகின்றன என்று பிரபல அமெரிக்க செய்தி ஊடகமான சி.என்.என். (CNN) குறிப்பிடுகிறது.
அதேபோல் வல்லரவு நாடுகளில் பொதுவாக வருடத்திற்கு 15 புதிய பள்ளிவாயல்கள் கட்டப்படுவதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா, ஆஸ்த்ரேலியா போன்ற நாடுகளி்ல் கருப்பினத்தை சேர்ந்த மக்கள் அதிகமாக இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். ஏற்றத் தாழ்வு காட்டப் படுவதின் மூலம் மனதுடைந்து , வாழ்கையையே வெருக்கும் அளவுக்கு தள்ளப் பட்ட மக்களுக்கு உண்மையான தெளிவை இஸ்லாம் கொடுத்து மனிதனை மனிதனாக வாழ வைப்பதே இதற்கான காரணமாகும்.
இளம் வயதிலேயே இஸ்லாத்தினால் ஈர்க்கப் படும் பெரும்பாலான ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பெண்கள் தாங்கள் இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப் பட்டதற்கான காரணமாக ஹிஜாபைத் தான் தெரிவிக்கிறார்கள்.
இத்தாலி போன்ற நாடுகளில் பல சகோதரர்கள் குடும்பமாகவே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதும் அங்குள்ள அரச குடும்பத்தை சேர்ந்தவர்களே இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ளதும் அந்நாட்டு ஆளும் வர்க்கத்தை சிந்திக்க வைத்துள்ளது.
இஸ்லாத்திற்கு எதிராக எத்தனையோ தடைகளை விதித்தும், அந்தத் தடைகளையெல்லாம் தாண்டி இஸ்லாம் வீறு நடை போடுவது தமக்கு வியப்பை ஏற்படுத்துவதாக ரோமன் கத்தோலிக்க முன்னனி அறிஞரான விக்டோரியா பார்மன்டி தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment