சவுதி அரேபியாவில் வங்காளதேசத்தைச் சேர்ந்த 8 பேரின் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவுதி அரேபியாவில் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள் தங்கி பணி யாற்றி வருகின்றனர். அவர்களில் சிலர் அங்குள்ள பண்டக சாலை மற்றும் வணிக நிறுவனங்களில் பொருட்களை கொள்ளையடித்தனர்.அப்போது அதை தடுத்த வர்களை கொலை செய்தனர்.
இதை தொடர்ந்து இச் சம்பவத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது அங்குள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட 11 பேரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து நேற்று பொதுமக்கள் மத்தியில் வங்காளதேசத்தைச் சேர்ந்த 8 பேரின் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மீத முள்ள 3 பேரின் தண்டனை விரைவில் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment