Monday, October 17, 2011

5 நாடுகளுக்கு 188 நாடுகள் அடிமைகளாக இருக்கிறது .



ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளில் 188 நாடுகள் பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் 5 நாடுகளுக்கு கட்டுப்பட்டு அடிமைகளாக இருக்க வேண்டும். இவ்வாறான ஒரு சட்டத்தையே ஐக்கிய நாட்டுகள் சபை கொண்டுள்ளது. இது எவ்வாறு நாடுகளுக்கிடையில் நீதியை ஏற்படுத்தும்? என துருக்கி நாட்டுப் பிரதமர் தையூப் அர்துகான் கேள்வி எழுப்பினார்.

நேற்று புதன் கிழமை இஸ்தன்பூல் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த மாநாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், தற்போதைய ஐக்கிய நாட்டுச் சபையின் சட்டத்தின் மூலம் நாடுகளுக்கிடையில் நீதியை நிலைநாட்ட முடியாது.

இச்சட்டம் மேலும் மேலும் நாடுகளுக்கிடையில் சமத்துவமின்மையையும், வறுமையையுமே ஏற்படுத்தும். இவ்வாறான சட்டம் தற்போது நடைமுறையிலுள்ளதால் தான் சோமாலியா, தென்னாபிரிக்க நாடுகள் போன்ற வறுமையான நாடுகள் உருவாகின்றன.

எனவே, ஐக்கிய நாட்டுச் சபையின் சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். எல்லா நாடுகளுக்குமிடையில் சமத்துவம் நிகழ வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்


0 comments:

Post a Comment