லிபியாவின் தலைவர் கேர்ணல் முஅம்மர் கடாபி ஸேட்நகரில் கொல்லப்பட்டுள்ளார்.ஸேட் நகரை கிளர்ச்சிப்படை கைப்பற்றிய சிறிது நேரத்தின் பின்னர் கடாபி கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.ஒரு வாரமாக இடம்பெற்ற கடுமையானசன்டையின் பின்னர் கடாபியின் சொந்த ஊரான ஸேட்நகரை கிளர்ச்சிப்படை கைப்பற்றியது.கிளர்ச்சிப்படையின் தாக்குதலால் கடாபியின் இருகால்களிலும் ஏற்பட்ட கடுமையான காயத்தின் பின்னர் மரணமடைந்ததாக NTC எனப்படும் தேசிய நிலைமாற்றுப் பேரவையின் உயர் இராணுவ அதிகாரி அப்துல் ஹகீம் பில்ஹாஜ் தெரிவித்துள்ளார். பாதுகாதுப்புக்காரணங்களுக்காக கடாபியின் உடல் இரகசியமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்;. இப்படத்தில் கடாபி கடுமையான தாக்கப்பட்டு இரத்தவெள்ளத்தில்
காணப்படுகிறார்.கையடக்கத்தொலைபேசியில் எடுக்கப்பட்ட இப்படத்துக்கு உத்தரவாதமில்லை என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.இதேவேளை நேட்டோ மற்றும் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் என்பன கடாபியின் கொலை
தொடர்பான செய்தியை இதுவரை உறுதிப்படத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment