Monday, October 24, 2011

சங்கமா? நாடக குழுவா?


காற்றில் பறக்கும் சங்கத்தின் வாக்குறுதி...
நமதூரில் பல்வேறு எதிபார்ப்புகளுக்கு மத்தியில் உள்ளாட்சி தேர்தல் எப்படியோ ஒரு வழியாக நடந்து முடிந்தது. தேர்தலில் பலரும் பல வாக்குறுதிகளை அள்ளி வீசி ஓட்டுக்களை சேகரித்தனர். இதில் நமது ஷம்சுல் இஸ்லாம் சங்கமும் தனது பங்கிற்கு வேட்பாளர்களை நிறுத்தி ஓட்டு சேகரிப்பில் ஈடுப்பட்டது. இவ்வேட்பாளர்கள் அனைவரும் கட்சி சார்பற்றவர்கள் என்றும் தேர்தலில் ஜெயித்தாலும் எந்த கட்சியிலும் சேர மாட்டார்கள் எனவும் மக்களிடம் வாக்குறுதியளித்து ஓட்டு கேட்டது.

இந்நிலையில், கடந்த 21-10-11 அன்று தேர்தல் முடிவுகள் வெளிவந்தது. இதில் நமது சங்கத்தின் சார்பில் போட்டியிட்ட19வது வார்டு வேட்பாளர் அஹ்மது ஹாஜா அவர்களின் மனைவி சவ்தா அவர்கள் வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்று சில மணி நேரங்களிலேயே த.மு.மு.க வின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tmmk.in ல் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற மமக வின் வேட்பாளர்கள் வரிசையில் நமது சங்கத்தின் சார்பில் போட்டியிட்ட 19வது வார்டு வேட்பாளர் அஹ்மது ஹாஜா அவர்களின் மனைவி சவ்தா அவர்களின் பெயரும் உள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின் போதே மமக வினரால் கொடுக்கப்பட்ட நோட்டிஸில் சங்கத்தின் வேட்பாளர்கள் அனைவரையும் மமக வின் வேட்பாளர்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போதே நடுநிலையாளர்கள் பலரும் இதை சுட்டிக்காட்டினர். இதனை அதிரை எக்ஸ்ப்ரஸ்,அதிரை செய்தி, அதிரை குரல் உள்ளிட்ட இணையதளங்களும் வெளியிட்டு இருந்தது. இதையெல்லாம் கண்டுகொள்ளாத சங்கம் இவ்வுண்மையை மறுத்ததோடு உண்மையை உலகிற்கு உரைத்த நல்லுள்ளங்களையும் கண்மூடித்தனமாக சாடியது.
முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்க முயன்றது சங்கமா? அல்லது த.மு.மு.க வின் நாடக குழுவா? மக்களே சிந்திப்பீர்.

0 comments:

Post a Comment