Showing posts with label adiraiseithi. Show all posts
Showing posts with label adiraiseithi. Show all posts

Monday, October 24, 2011

சங்கமா? நாடக குழுவா?


காற்றில் பறக்கும் சங்கத்தின் வாக்குறுதி...
நமதூரில் பல்வேறு எதிபார்ப்புகளுக்கு மத்தியில் உள்ளாட்சி தேர்தல் எப்படியோ ஒரு வழியாக நடந்து முடிந்தது. தேர்தலில் பலரும் பல வாக்குறுதிகளை அள்ளி வீசி ஓட்டுக்களை சேகரித்தனர். இதில் நமது ஷம்சுல் இஸ்லாம் சங்கமும் தனது பங்கிற்கு வேட்பாளர்களை நிறுத்தி ஓட்டு சேகரிப்பில் ஈடுப்பட்டது. இவ்வேட்பாளர்கள் அனைவரும் கட்சி சார்பற்றவர்கள் என்றும் தேர்தலில் ஜெயித்தாலும் எந்த கட்சியிலும் சேர மாட்டார்கள் எனவும் மக்களிடம் வாக்குறுதியளித்து ஓட்டு கேட்டது.

இந்நிலையில், கடந்த 21-10-11 அன்று தேர்தல் முடிவுகள் வெளிவந்தது. இதில் நமது சங்கத்தின் சார்பில் போட்டியிட்ட19வது வார்டு வேட்பாளர் அஹ்மது ஹாஜா அவர்களின் மனைவி சவ்தா அவர்கள் வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்று சில மணி நேரங்களிலேயே த.மு.மு.க வின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tmmk.in ல் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற மமக வின் வேட்பாளர்கள் வரிசையில் நமது சங்கத்தின் சார்பில் போட்டியிட்ட 19வது வார்டு வேட்பாளர் அஹ்மது ஹாஜா அவர்களின் மனைவி சவ்தா அவர்களின் பெயரும் உள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின் போதே மமக வினரால் கொடுக்கப்பட்ட நோட்டிஸில் சங்கத்தின் வேட்பாளர்கள் அனைவரையும் மமக வின் வேட்பாளர்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போதே நடுநிலையாளர்கள் பலரும் இதை சுட்டிக்காட்டினர். இதனை அதிரை எக்ஸ்ப்ரஸ்,அதிரை செய்தி, அதிரை குரல் உள்ளிட்ட இணையதளங்களும் வெளியிட்டு இருந்தது. இதையெல்லாம் கண்டுகொள்ளாத சங்கம் இவ்வுண்மையை மறுத்ததோடு உண்மையை உலகிற்கு உரைத்த நல்லுள்ளங்களையும் கண்மூடித்தனமாக சாடியது.
முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்க முயன்றது சங்கமா? அல்லது த.மு.மு.க வின் நாடக குழுவா? மக்களே சிந்திப்பீர்.

Sunday, October 23, 2011

அதிரையில் ஒற்றுமை இல்லை!பரப்பரப்பு செய்தி!

அதிரையில் நேற்றுமுன் (20.10.2011) இரவு 45நிமிடங்கள் மின் தடை ஏற்பட்டது இதனால் பொதுமக்கள் அனைவரும் வெறுப்பு அடைந்தனர்(இதில் மட்டும் ஒற்றுமை). அதிரையில் சில தினங்களுக்கு முன்பு எட்டு நாள்களாக தொடர்ந்து தெரு விளக்குகள் எரிந்தனர் அப்போது எல்லாம் அதிரை மின்சாரவாரியத்தில் பணி புரிவும் ஊழியர்கள் எங்கே சென்றனர்? தஞ்சை மாவட்டதில் அதிக வருமானம் தர கூடிய அதிரைக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை (அடிக்கடி மின் தடை)? இதர்க்கு காரணம் என்ன? அதிரை சகோதர்களே சிந்திபீர்!

இதர்க்கு காரணம்  நமதூரில் ஒற்றுமை இல்லை.இந்த நிலை மாற வேண்டுமா? அதிரையில் உள்ள ஏழு சங்கங்கள் மற்றும் இயக்கங்கள் அனைத்தும் ஒன்று பட வேண்டும்! அது மட்டுமல்ல இளைஞர்கள் ஒன்று பட வேண்டும்! இதர்க்கான முயற்சிகளில் நாம் அனைவரும் ஈடு படுவோம் இன்ஷா அல்லாஹ்.

இது மட்டும் நடந்தால் நமதூரில் உள்ள சுகாதர சீர்கேடு மற்றும் பல குரைகள் தீரும்.

அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப்பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள்.அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 3:103)

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)


Wednesday, October 5, 2011

சேர்மன் பதவிக்கு போட்டியிடும் வேட்ப்பாளர்களின் சின்னங்கள்!!


























  அதிராம்பட்டினம் வாக்காளர்களே   உங்கள் பொன்னான  வாக்குகளை  நன்றாக சிந்தித்து பதியவும்................

Tuesday, October 4, 2011

குர்ஆனை அவமதித்தவர்களை கண்டித்து போராட்டம் - போலீஸ் தாக்கியதில் நான்கு பேர் மரணம் .



புதுடெல்லி:ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு நீதி கேட்டு முஸ்லிம்களும் சமூக ஆர்வலர்களும் போராடிவரும் நிலையில் தற்போது மேலும் அதுபோன்று ஒரு சம்பவம் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி பிஜேபி ஆளும் உத்தரகான்ட் மாநிலம் ருத்ராபூர் நகரில் நடந்தேறியுள்ளது. இச்சம்பவத்தில் 4 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். இதனால் நகர் முழுவதும் பதற்றம் நீடிக்கிறது.
ருத்ராபூர் உத்தரகான்ட் மாநிலம் உதம்சிங் மாவட்டத்தில் உள்ள ருத்ராபூர் நகர் கடந்த பல வருடங்களாக அமைதியாக இருந்து வந்தது.ஆனால் கடந்த ஒரு வருடமாக சில ஹிந்துத்வா வாதிகளால் அங்கு கலவரங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி விஷமிகள் சிலர் ஒரு பையில் புனித குர்ஆன் பிரதியையும் பன்றி இறைச்சியையும் வைத்து அருகில் இருந்த கோயிலுக்குள் வீசிவிட்டு சென்றுள்ளனர். இதை அறிந்த அப்பகுதி முஸ்லிம்கள் குர்ஆனை அவமதித்தவர்களை கைது செய்யக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையும் குற்றவாளிகளை கைது செய்வதாக கூறி அனுப்பியுள்ளனர்.
ஆனால் இரண்டு நாட்கள் கடந்தும் குர்ஆனை அவ்மதித்தவர்களின் மீது எந்தவித நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை. அக்டோபர் 2 ஆம் தேதி அப்பகுதியில் மீண்டும் இதே போன்றதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சில ஹிந்து சமூகத்தினர் குர்ஆனை அவமதித்ததுடன் எரித்தும் விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த முஸ்லிம் சமூகத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுக்ககோரி காவல்நிலையம் சென்றனர். ஆனால் அப்போதும் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளாததால் முஸ்லிம்கள் காவல்நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் மிரட்டினர். ஆனால் அவர்கள் ‘குர்ஆனை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம்’ என்றனர். இதனால் கோபமுற்ற காவல்துறை அவர்களை லத்தியால் அடித்ததால் பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் ஆத்திரம் கொண்ட முஸ்லிம் மக்கள் எதிர்ப்பில் இறங்கியுள்ளனர். இதனையே சாக்காக வைத்து முஸ்லிம்கள் மீது காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.இதில் 4 முஸ்லிம்கள் உயிர் இழந்துள்ளனர். மேலும் இந்த பிரச்சினையை பயன்படுத்திக் கொண்டு சில ஹிந்துதுவவாதிகள் முஸ்லிம்களின் கடைகளை அடித்து, நொறுக்கி சேதபடுத்தியும், வாகனங்களை தீ வைத்து கொழுத்தியும் உள்ளனர் என்று சம்பவத்தை நேரில் கண்ட பாதிக்கப்பட்ட பகுதியில் மருத்துவமனை வைத்திருக்கும் திரு.ஷா ஜிலானி என்பவர் தெரிவித்தார்.
மேலும் ஜிலானி கூறியதாவது; ‘போலிஸ் துப்பாக்கி சூடு நடத்தி கொண்டிருக்கும்போது ஹிந்து சமூகத்தை சேர்ந்த குண்டர்கள் முஸ்லிம் கடைகளை சூறையாடியதுடன் வாகனங்களுக்கும் தீ வைத்துக் கொளுத்தினர். கடைத் தெருவில் உள்ள எந்த முஸ்லிம்களின் கடைகளும் மிஞ்சவில்லை அனைத்தும் சூறையாடப் பட்டதுடன் தீக்கு இரையாகின.’ என்றார்.
இச்சம்பவம் குறித்து ஜம்மியத் உலமா ஏ ஹிந்த் அமைப்பின்  உதம்சிங் மாவட்டத்தின் கிளை செயலாளர் அப்துல் காதிர் தெரிவிக்கையில்; ‘போலிஸ் துப்பாக்கி சூட்டில் 4 முஸ்லிம்கள் கொல்லப்பட்டது மிகவும் வேதனை அளிக்கிறது. மேலும் முஸ்லிம்கள் பெரும் அளவில் கைது செய்யப் பட்டுள்ளனர்.இதனால் அப்பகுதி முஸ்லிம்கள் பீதி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் கடந்த ஆண்டும் இது போன்று சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் தெரவித்தார். ஹிந்து அமைப்பினர் சிலர் சாமா மஸ்ஜித் மீது பன்றியின் இறைச்சியை எறிந்தனர் என்றும் அது தொடர்பாக காவல்துறை சிலரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர் பின்பு எந்த தண்டனையும் இல்லாமல் குற்றவாளிகள் வெளியே விடப்பட்டனர்’ என்றும் கூறினார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்ட உத்தரகான்ட் மாநிலத்தை பிஜேபி ஆண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.